மராத்தா போராட்டம் தீவிரம் இணைய சேவை முடக்கம்| Dinamalar

மராத்தா போராட்டம் தீவிரம் இணைய சேவை முடக்கம்

Added : ஆக 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

மும்பை:மஹாராஷ்டிர மாநிலத்தில், இட ஒதுக்கீடு கோரி, மராத்தா சமூகத்தினர் நடத்தி வரும் போராட்டம், தீவிரமடைந்துள்ளது.

தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கும் வகையில், மாநிலத்தின் பல பகுதிகளில், 'இன்டர்நெட்' எனப்படும் இணைய சேவை முடக்கி வைக்கப்பட்டு உள்ளது.அழைப்புமஹாராஷ்டிர மாநிலத்தில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.

சமீபகாலமாக, இந்த மாநிலத்தில், மராத்தா சமூகத்தினர், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 16 சதவீத இட ஒதுக்கீடு கோரி, போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.நேற்று, மராத்தா சமூகத்தினர் சார்பில், முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதையடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், போராட்டக்காரர்கள், முக்கிய சாலைகளை மறித்து போராட்டம் நடத்தினர். இதனால், சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.அவுரங்காபாத் மாவட்டத்தில், உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா கட்சிக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

புனே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்து, அங்கிருந்த பொருட்களை, போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர். இதையடுத்து, புனே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டது.மாநிலத்தின் மேலும் சில பகுதிகளிலும், இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டது. தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் அறிவித்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புனே உள்ளிட்ட முக்கிய நகரங்களில், அரசு பேருந்துகள், வாடகைக்கார்கள், சரக்கு வாகனங்கள் இயக்கப்படவில்லை.இதன் காரணமாக, பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. ஆனால், தலைநகர் மும்பையில், வழக்கம் போல் வாகனங்கள் இயங்குகின்றன.

கோரிக்கை

மராத்தா சமூகத்தினரின், இட ஒதுக்கீடு குறித்து பரிசீலித்து முடிவெடுக்க, நவம்பர் மாதம் வரை அவகாசம் அளிக்கும்படி, முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கோரிக்கை விடுத்திருந்தார்.இதை நிராகரித்து, மராத்தா சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத் தக்கது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X