200 அடியை எட்டியது அப்பர் பவானி அணை 18 ஆண்டுகளுக்கு பின் முழு கொள்ளளவை தொட்டது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

200 அடியை எட்டியது அப்பர் பவானி அணை 18 ஆண்டுகளுக்கு பின் முழு கொள்ளளவை தொட்டது

Added : ஆக 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 200 அடியை எட்டியது அப்பர் பவானி அணை  18 ஆண்டுகளுக்கு பின் முழு கொள்ளளவை தொட்டது

ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில், பெரிய அணையாக கருதப்படும், அப்பர் பவானி அணை, 18 ஆண்டுகளுக்கு பின், 200 அடியை எட்டிஉள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள, அப்பர் பவானி, எமரால்டு, அவலாஞ்சி, குந்தா, கெத்தை, பைக்காரா உள்ளிட்ட, 13 அணைகள் மற்றும், 30 தடுப்பணைகளில், பருவமழையின் போது, தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. இந்த நீரை பயன்படுத்தி, 12 மின் நிலையங்களில், மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது
.உபரி நீர் திறப்பு

கடந்தாண்டு, சராசரியாக, 90 செ.மீ., மழை பதிவானதால், 75 சதவீதம் வரை, அணைகளில் தண்ணீர் சேகரமானது. நடப்பாண்டில், இதுவரை, 90 செ.மீ., அளவுக்கு பதிவாகி உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால், வினாடிக்கு, 150 கன அடி தண்ணீர், அணைகளுக்கு வந்த வண்ணம் உள்ளது.

மாவட்டத்தில் பெரிய அணையாக கருதப்படும், அப்பர் பவானி அணை, 2000ம் ஆண்டில் முழு கொள்ளளவான, 210 அடியை எட்டியது; உபரி நீர் வெளியேற்றப்பட்டது. கடந்த, 18 ஆண்டுகளுக்கு பின், தற்போது, 200 அடி வரை அணை நிரம்பி உள்ளது.

மின் உற்பத்தி வட்ட மேற்பார்வை செயற்பொறியாளர், ரகு கூறியதாவது:நடப்பாண்டில், கோடை மழை மற்றும் தென்மேற்கு பருவமழை, எதிர்பார்த்த அளவு பெய்ததால், 18 ஆண்டுகளுக்கு பின், அப்பர் பவானி அணையில், 200 அடி வரை தண்ணீர் நிரம்பிஉள்ளது. இன்னும், சில நாட்கள் மழை தொடருமானால், முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

பவானி சாகர் நிலவரம்

கோவை, நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ளது, பில்லுார் அணை. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான, நீலகிரி மாவட்ட மலைப் பகுதியில், இரண்டு நாட்களாக, கனமழை பெய்து வருகிறது. இதனால், பில்லுார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் முழு கொள்ளளவான, 100 அடியில், தற் போது, 98 அடி வரை தண்ணீர் உள்ளது.

நேற்று காலை முதல், பில்லுார் அணையில் இருந்து, உபரி நீர், பவானிசாகர் அணைக்கு திறக்கப் பட்டுள்ளது. நேற்று மதியம், 2:00 மணி நிலவரப்படி, பவானி சாகர் அணையின் நீர்மட்டம், 97.49 அடி, நீர் இருப்பு, 26.8 டி.எம்.சி.,யாக இருந்தது.

பவானிசாகர் அணை, 120 அடி உயரம்; கொள்ளளவு, 32.8 டி.எம்.சி., ஆகும். தற்போது, 26.8 டி.எம்.சி., தண்ணீர் உள்ளது. முழு கொள்ளளவை எட்ட, இன்னும், 6 டி.எம்.சி., தண்ணீர் தேவை. பருவமழை தீவிரம் அடைந்து, நீர்வரத்து அதிகரித்தால், இன்னும் சில நாட்களில், அணை நிரம்ப வாய்ப்பு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X