காமனூரில் செயல்படாத திடக்கழிவு மேலாண்மை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காமனூரில் செயல்படாத திடக்கழிவு மேலாண்மை

Added : ஆக 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தாண்டிக்குடி:காமனுார் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் வெறும் அறிவிப்புடன் முழுமை பெறாமல் உள்ளது.கொடைக்கானல் ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் துாய்மை பாரத திட்டம் நடைமுறையில் உள்ளது. இதற்காக துாய்மை காவலர்கள் நியமனம் செய்து மக்கும், மக்காத குப்பைகள் வீடுதோறும் சேகரிக்கப்பட்டு, தரம் பிரிக்கப்படுகிறது.இதிலிருந்து மண்புழு உரம் தயாரிப்பு, பிளாஸ்டிக் மறுசுழற்சி, கழிவுகள் பிரிப்பது உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கின்றன. பெரும்பாலான ஊராட்சிகளில் இத்திட்டம் பெயரவிளற்கு மட்டுமே செயல்படுத்தப்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.இதில் காமனுார் ஊராட்சியில் இத்திட்டத்திற்கான அறிவிப்பு பலகைகள் நிறுவியதுடன், மெயின் ரோட்டோரம் பள்ளங்களை ஏற்படுத்தி குப்பையை குவித்தது மட்டுமே செயல்பாடாக இருந்தது. நகர்பகுதியில் குப்பை வழக்கம் போல் தேங்கி சுகாதாரக்கேடுடன்தான் உள்ளது. காமனுார் செல்லும் மயான பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுவதாக ஏராளமான அறிவிப்பு பலகைகள் மட்டுமே உள்ளது. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதிஎன்ன ஆனது,இத்திட்டம் மூலம் ஊராட்சிக்கு எவ்வளவு வருவாய் கிடைத்தது உள்ளிட்ட தகவல்களை தெரியப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X