காட்டு யானைகளை விரட்ட 'கும்கி'| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காட்டு யானைகளை விரட்ட 'கும்கி'

Added : ஆக 10, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தாண்டிக்குடி:சில ஆண்டுகளாக பரப்பலாறு மற்றும் பண்ணைப்பட்டி கோம்பை மார்க்கமாக காட்டு யானைகள் மலைப்பகுதிக்கு இடம் பெயர்ந்தன. மலைப்பகுதி முழுவதும் வலம் வரத் துவங்கிய யானைகளால் மலைவாழை, காபி, மிளகு, ஏலம் உள்பட மலைத்தோட்டப் பயிர்கள் சேதமடைந்தன.இதில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்ட மலைவாழைகள் அடியோடு சேதமடைந்தன. யானைகளால் தாண்டிக்குடி மூக்கம்மாள், சேம்படியூத்து மாதி ஆகியோர் பலியாகினர். தற்போதும் மலைக்கிராமங்களில் யானைகளால் பொதுமக்கள் அச்சத்துடன் வசிக்கின்றனர்.காட்டுயானைளால் வாழ்வதாரத்தை இழந்துள்ளனர்.வனத்துறைபெயரளவிற்கே நடவடிக்கை எடுக்கிறது. தாண்டிக்குடி அருகே கே.சி.பட்டியில் கீழ் பழநிமலை சிறுவிவசாயிகள் சங்கம் சார்பில்காட்டு விலங்குகளின் வரவை கட்டுப்படுத்துவது, வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பது குறித்து சிறப்பு கூட்டம் நடந்தது. முன்னோடி விவசாயி நமச்சிவாயம் உட்பட விவசாயிகள் பேசினர்.சமூக ஆர்வலர் கோகுலகிருஷ்ணன் பேசியதாவது:கீழ்பழநி மலைப்பகுதியில்காட்டு யானைகள் இருந்ததில்லை. சில ஆண்டுகளாக இடம் பெயர்ந்த யானைகளால் இங்குள்ள விவசாயிகள் வாழ்வாதாரத்தை தொலைத்து நகர்பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர். மலைப்பகுதியில் வனத்துறை தகவலின் படி 27 யானைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இவற்றை விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-ஆக-201804:09:19 IST Report Abuse
ஆப்பு காட்டு யானைகளுக்கு கொஞ்சம் காடுகளை விட்டு வையுங்க....கும்கியையும் காட்டுக்குள் விடுங்க...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X