அடுத்த வீட்டில் முட்டை கோழிக்கு என்ன ஆச்சு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அடுத்த வீட்டில் முட்டை கோழிக்கு என்ன ஆச்சு

Added : ஆக 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல்:கோழிகள் அடுத்த வீட்டிற்கு சென்று முட்டையிடுவதை தடுக்கும் வழிகள் குறித்து கால்நடைத்துறை ஓய்வு இணை இயக்குனர் ராஜேந்திரன் கூறியதாவது:குடும்ப செலவை ஈடுகட்ட வளர்க்கும் கோழிகளில் சில பக்கத்து வீட்டுக்குச் சென்று முட்டையிடும். இதனால்வளர்ப்பவர்களுக்கு நஷ்டம் ஏற்படும். இதை தவிர்க்க, கோழியின் ஒரு இறக்கையின் நுனியை வெட்டி விட வேண்டும். இது வலது புறமாகவோ, இடது புறமாகவோ இருக்கலாம்.இரு புறங்களின் இறக்கை நுனியை மட்டும் வெட்டினால் கோழி பறக்கவே செய்யும். மேலும் கோழிகளுக்கு சிறிதளவு தானியமே சாப்பிடக் கொடுத்தால் அவை வேண்டிய அளவு தீவனத்தை வெளியில் சென்று மேய்ந்து கொள்ளும்.அதேசமயம் தாராளமாக தானியங்களை தந்தால், அவை வளர்க்கப்படும் வீடுகளிலேயே உலா வரும். கோழிகள் மகிழ்ச்சியாக குப்பைக்குள் தலையை விட்டு சில நேரங்களில் ஒளிந்து கொள்ளும். அப்படி செய்தால் கோழிகள் போதுமான தீவனம் சாப்பிட்டு விட்டன என்று பொருள். இதை செய்தால் கோழிகள் அடுத்த வீட்டிற்கு சென்று முட்டையிடாது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X