திருப்பூரில் கிணற்றுக்குள் விழுந்த வீடுகள் ஆக்கிரமித்து கட்டியதாக குற்றச்சாட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்பூரில் கிணற்றுக்குள் விழுந்த வீடுகள் ஆக்கிரமித்து கட்டியதாக குற்றச்சாட்டு

Added : ஆக 10, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
திருப்பூரில், கிணற்றுக்குள், விழுந்த ,வீடுகள்,ஆக்கிரமித்து கட்டியதாக ,குற்றச்சாட்டு

திருப்பூர்:திருப்பூரில், மாநகராட்சிக்கு சொந்தமான கிணற்றின் மீது ஆக்கிரமித்து கட்டிய, மூன்று வீடுகள் கிணற்றுக்குள் புதைந்தன.
திருப்பூர் மாநகராட்சி, 56வது வார்டு பகுதியில், கே.ஆர்.ஆர்., தோட்டம் உள்ளது. இப்பகுதியில், மாநகராட்சிக்கு சொந்தமான பெரிய கிணறு உள்ளது. அதனருகே, பூங்கா, குடிநீர் சுத்திகரிப்பு செய்யும் அறையும் உள்ளன.
வாடகை
இங்கு தனியார் ஒருவர், மனைகள் விற்பனை செய்து உள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த இருவர், நான்கு வீடுகளை கட்டி, வாடகைக்கு விட்டுள்ளனர். ஒரு பகுதி ஓடைப் பகுதியின் கரையிலும், மற்றொரு பகுதி, மாநகராட்சி கிணற்றின் பாதுகாப்பு சுவர் மீதும் கட்டப்பட்டது. இந்த வீடுகளில், வடமாநில தொழிலாளர்கள், குடும்பத் துடன் வசிக்கின்றனர்.

ஆதரவு

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, மூன்று வீடுகள், கிணற்றுக்குள் சரிந்து விழுந்தன. வீட்டிலிருந்த பொருட்களும் கிணற்றுக்குள் விழுந்து, தண்ணீரில் மூழ்கின. வீட்டில் வசித்தவர்கள், வெளியூர் சென்று விட்டதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.அப்பகுதியினர் கூறிய தாவது:

ஆளுங்கட்சியினர் ஆதரவுடன், மாநகராட்சி கிணற்றை ஆக்கிரமித்து வீடு கட்டப்பட்டுள்ளது. இது குறித்து, மாநகராட்சி அலுவலகத்தில், புகார் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் ஆய்வு செய்து, ஒரு பகுதியில் இருந்த இரண்டு வீடுகளை மட்டும் அகற்றினர். மீதமிருந்த வீடுகள் தான், கிணற்றில் சரிந்து விழுந்துள்ளன. ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து வீடுகளையும் அகற்ற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாநகராட்சி உதவி கமிஷனர் கண்ணனிடம் கேட்ட போது, ''கிணற்றுக்கு அருகில் தனியார் இடம் உள்ளது. ''அந்த இடத்தில் கட்டிய வீடு தான், சரிந்து விழுந்தது. அது ஆக்கிரமிப்பு கிடையாது,'' எனக் கூறி, மொபைல் போன் இணைப்பை துண்டித்து விட்டார்.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kannan - Madurai,இந்தியா
10-ஆக-201816:20:26 IST Report Abuse
kannan கொஞ்ச நேரம் அசையாமல் நின்றால், நம்ம தலையிலும் வீடு கட்டிருவாங்க இந்த அரசியல்வியாதிகள். அதிகாரிகளும் இதற்கு உடந்தை தான்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
10-ஆக-201808:58:30 IST Report Abuse
Srinivasan Kannaiya இயறக்கை தனது வழக்கை தானே முடித்து வைத்து விட்டது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X