திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்

Added : ஆக 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் மோட்டார் வாகன சட்டத்திருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மோட்டார் வாகன தொழில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மோட்டார் வாகன சட்டத்தில் 68 திருத்தங்கள், 28 புதிய பிரிவுகள் கொண்டு வரப்பட உள்ளது. இதனால் 5 ஆண்டுக்கு ஒரு முறை டூவீலர்களுக்கு எப்.சி., எடுக்க வேண்டும். டூவீலரில் இருவருக்கு மேல் சென்றால் ஓவர் லோடு என தனியாக ரூ.5 ஆயிரம், விபத்திற்கு இழப்பீடு ரூ.5 லட்சம் மட்டுமே, ஒர்க் ஷாப்புகளை வாகனம் உற்பத்தி செய்யும் கம்பெனி மட்டுமே நடத்த முடியும்.ஆட்டோ மொபைல் தொழில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் போன்றவை நடைமுறைப்படுத்தப்படும். அதனால் பலரும் வேலை வாய்ப்பை இழக்க நேரிடும். எனவே, இந்த சட்டத்திருத்தத்தை அமல்படுத்தக் கூடாது, என மோட்டார் வாகன தொழில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு, இருசக்கர மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். துணை செயலாளர் ராம்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.பழநி: திண்டுக்கல் ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இருசக்கர வாகன பழுதுநீக்கும் சங்க தலைவர் நிஜாம்மைதீன், சி.ஐ.டி.யூ., கன்வீனர் பிச்சை முத்து முன்னிலை வகித்தனர். வி.சி. கட்சியினர், ஆட்டோஓட்டுனர்கள், வேன்ஓட்டுனர்கள், கால்டாக்சி உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X