மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு அடையாள அட்டை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு அடையாள அட்டை

Added : ஆக 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தவர்கள் இணையதளத்தில் தற்காலிக அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யலாம்.மாற்றுத் திறனாளிகளுக்கு மாநில அரசுகள் அடையாள அட்டை வழங்குகிறது. இந்த சேவையை இந்தியா முழுவதும் உள்ளவர்களுக்கு வழங்க முடிவு செய்து, அதற்காக ஆதார் கார்டை போல் சிறப்பு அடையாள அட்டையும் வழங்கி வருகிறது. அதில் 40 சதவீதத்துக்கு மேல் ஊனமுற்றோரின் பெயர், வயது, முகவரி, ஆதார் எண், ஊனம் தொடர்பான விபரங்கள், அவருக்கான பிரத்யேக எண் (கியூ.ஆர்., கோடு) இடம் பெற்றிருக்கும்.ரேஷன், ஆதார் கார்டு, ஜாதி மற்றும் மருத்துவ சான்றிதழ்களின் நகல்கள், புகைப்படம் கொடுத்து விண்ணப்பிக்கலாம். மாநிலம் முழுவதும் அதற்கானபிரத்யேக மென்பொருள், லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பு அடையாள அட்டை பெற 2 ஆயிரத்து 200 பேர் விண்ணப்பித்தனர். அவர்களின் விபரங்கள் சரிபார்க்கும் பணி நடக்கிறது. தகுதியானவர்களுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) அனுப்பப்படும். அதில் இருந்து 20 நாட்களுக்குள் அவர்களின் முகவரிக்கு அட்டை அனுப்பப்படும்.குறுஞ்செய்தி கிடைத்தவர்கள் இணையதளத்தில் தற்காலிக அடையாள அட்டையை பிரின்ட் எடுத்துக் கொள்ளலாம், என மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுவாமிநாதன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X