சி.பி.ஐ., விசாரணை கோரிய மனு தள்ளுபடி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சி.பி.ஐ., விசாரணை கோரிய மனு தள்ளுபடி

Added : ஆக 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை:சென்னை, அண்ணா பல்கலை தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை கோரிய வழக்கை, உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

மதுரை, ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு: சென்னை அண்ணா பல்கலையில், 2017 தேர்வு விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ததில், முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சி.பி.ஐ., விசாரித்தால் தான் உண்மை வெளிவரும். வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்ற உத்தரவிட வேண்டும்.இவ்வாறு ரமேஷ் மனு செய்தார்.

நீதிபதிகள், எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் அமர்வு விசாரித்தது.அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்: ஜூலை, 31ல், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிந்தனர். விசாரணை, சரியான கோணத்தில் செல்கிறது. மனுதாரர், சி.பி.ஐ., விசாரணை கோரி, அரசுக்கு, ஆக., 2ல் மனு அனுப்பினார். அவசர கதியில் இங்கு மனு செய்துள்ளார்.

நீதிபதிகள்: லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணை, துவக்க நிலையில் உள்ளது. மனுதாரர் அவசரகதியில் பொதுநல மனு செய்துள்ளார். மனுவை தள்ளுபடி செய்கிறோம்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X