ஓடைகளில் சீமைக்கருவேல மரங்கள்:வறட்சியில் சிக்கும் விளைநிலங்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓடைகளில் சீமைக்கருவேல மரங்கள்:வறட்சியில் சிக்கும் விளைநிலங்கள்

Added : ஆக 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

உடுமலை;உடுமலை தாலுகாவின் முக்கிய மழை நீர் ஓடைகளில், சீமை கருவேல மரங்கள் அகற்றப்படாமல், பல்வேறு பிரச்னைகள் தொடர்கதையாக உள்ளது.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகாவிலுள்ள உப்பாறு அணைக்கு நீர் வரத்து அளிக்கும் மழை நீர் ஓடைகள் குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களில் அமைந்துள்ளது. மேலும், அந்த அணைக்கு, பி.ஏ.பி., பிரதான கால்வாயிலிருந்து, அரசூர் ஷட்டரிலிருந்து ஓடை வழியாகவே தண்ணீர் திறக்கப்படுகிறது.
கால்வாயிலிருந்து, 25 கி.மீ., க்கும் அதிகமான துாரத்தில் அமைந்துள்ள அணைக்கு, ஓடையில் தண்ணீர் திறக்கும் போது, பல கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டத்துக்கு ஆதாரமாக இருக்கும். இந்த ஓடைகள் முழுவதுமே சீமைகருவேல மரங்கள் முளைத்து, அடர்ந்த வனப்பகுதியாக காட்சியளிக்கிறது. செழித்து வளர்ந்துள்ள இம்மரங்களால், நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு, மழைப்பொழிவும் குறைந்து விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.குறிப்பாக, ஓடை செல்லும், பெரியபட்டி, பூளவாடி, ஆமந்தகடவு உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில், வறட்சி தொடர்கதையாகியுள்ளது. கடந்தாண்டு, சீமைகருவேல மரங்களை அகற்ற உத்தரவிடப்பட்டும், பொதுப்பணித்துறை, உள்ளாட்சி நிர்வாகங்கள் மற்றும் வருவாய்த்துறையினரிடையே ஏற்பட்ட இழுபறியால்ஓடையில் பணிகள் துவங்கவில்லை.
தற்போது, பி.ஏ.பி., பாசன திட்டத்தில் இருந்து, அரசூர் ஷட்டர் வழியாக, உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க தாராபுரம் பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு முன்பாக, அணைக்கு நீர் செல்லும் உப்பாறு ஓடையில் சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என, எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X