குழாய் உடைஞ்சு ஒரு மாசமாச்சு!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குழாய் உடைஞ்சு ஒரு மாசமாச்சு!

Added : ஆக 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உடுமலை;உடுமலை அருகே, கூட்டுக்குடிநீர் திட்டக்குழாய் உடைந்து பல மாதங்களாக குடிநீர் வீணாகி வருகிறது.திருமூர்த்தி அணையிலிருந்து மடத்துக்குளம், பூலாங்கிணறு, கணக்கம்பாளையம், குடிமங்கலம் மற்றும் நகராட்சிக்கு, 2 என மொத்தம், 6 குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.தினமும், அணையிலிருந்து குடிநீருக்காக,
4 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இவ்வாறு, எடுக்கப்படும் குடிநீர் முழுமையாக மக்களுக்கு கிடைக்கப்பெறாமல் இடையிலே வீணாகும் நிலை காணப்படுகிறது. கூட்டுகுடிநீர் திட்டக்குழாய் பராமரிப்பில் காட்டும் அலட்சியமே இதற்கு காரணமாகும். இந்நிலையில், உடுமலை அருகே பள்ளபாளையத்தில் கடந்த பல மாதங்களாக கூட்டுக்குடிநீர் திட்டக்குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது.ஆனால், அதிகாரிகள் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என, மக்கள் தெரிவித்துள்ளனர். குழாய் உடைந்து வெளியேறும் தண்ணீர் கால்வாயாக மாறி, குளம்போல் தேங்கி நிற்கிறது.
இதனால், குடிநீர் வீணாவது மட்டுமில்லாமல், குடிநீருடன் கழிவுநீர் கலப்பதற்கும் வாய்ப்புள்ளது. அத்துடன், தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உள்ளிட்ட நோய் பரப்பும் கிருமிகள் உருவாகி மக்களை பாதிக்கிறது.பள்ளபாளையத்தில் மட்டுமில்லாமல் இதுபோல் பல இடங்களில் கூட்டுக்குடிநீர் திட்டக்குழாய் உடைந்து குடிநீரும் வெளியேறி வருகிறது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X