அறிவிப்பு பலகை வைக்காமல் விரிவாக்கம் :தேசிய நெடுஞ்சாலையில் விபத்து அபாயம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அறிவிப்பு பலகை வைக்காமல் விரிவாக்கம் :தேசிய நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்

Added : ஆக 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உடுமலை,;முறையான அறிவிப்பு பலகை வைக்காமல், தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் விரிவாக்க பணியால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.பொள்ளாச்சியிலிருந்து, ஊஞ்சவேலாம்பட்டி வரையும் மற்றும் உடுமலையில், கொழுமம் ரோடு பிரிவிலிருந்து மின்மயானம் வரையிலும், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இடையில் குறுகலாக உள்ள பாலங்களால் அவதிப்பட்ட வாகன ஓட்டிகள், பாலங்களை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தினர்.அதன்படி, தேசிய நெடுஞ்சாலையில் குறுகலாக உள்ள, 17 பாலங்களை விரிவாக்கம் செய்ய, 33 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், ராஜவாய்க்கால் பாலம், முக்கோணம், பூலாங்கிணறு, அந்தியூர் மற்றும் கெடிமேடு உள்ளிட்ட பாலங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.
அனைத்து பாலங்களும், 8 மீ.,ல் இருந்து 12.5 மீ., ஆக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலம் விரிவாக்கப்பணிகள் துவங்கியுள்ளன. பணி நடைபெறும் இடங்களில், முறையான அறிவிப்பு பலகை வைக்கப்படவில்லை.
இதனால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு, பள்ளம் தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போதிய வெளிச்சம் இல்லாத நிலையில், இரு சக்கர வாகன ஓட்டிகள் விழுந்து விபத்துக்களும் ஏற்படுகின்றன. இந்நிலையில், விபத்துகள் ஏற்படுவதற்கு முன், உடனடியாக உரிய அறிவிப்பு பலகை வைக்க, நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X