கனமழையால் மீண்டும் நிரம்பியது சோலையாறு:மூன்று மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கனமழையால் மீண்டும் நிரம்பியது சோலையாறு:மூன்று மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு

Added : ஆக 10, 2018
Advertisement

வால்பாறை;வால்பாறையில் கனமழை பெய்வதால், கடந்த, 40 நாட்களில், நான்காவது முறையாக சோலையாறு அணை நிரம்பி, மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேறியது.வால்பாறையில் இந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழையால், பி.ஏ.பி., அணைகள் அனைத்தும் கடந்த மாதம் நிரம்பியது. கடந்த இரண்டு வாரங்களாக மழை பொழிவு அளவு குறைந்ததால், அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேறாமல் இருந்தது.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.ஏற்கனவே நிரம்பி ததும்பிய சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், அணை நான்காவது முறையாக நிரம்பியது. அணையின், மூன்று மதகுகள் வழியாக நேற்று முன் தினம் முதல் வினாடிக்கு, 2,400 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 162.64 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 6,316 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு, 6,106 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.பரம்பிக்குளம் அணையில், 71.03 அடிக்கு நீர் மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு, 6,257 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. ஏற்கனவே அணை நிரம்பி இருந்ததால், மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது. சராசரியாக, 8,096 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
ஆழியாறு அணையில், 118.40 அடி நீர்மட்டம் இருந்தது. அணை நிரம்பிய நிலையில் இருந்ததால், மேல்ஆழியாறு அணையில் இருந்து ஆழியாறுக்கு வந்த தண்ணீர், மதகுகள் வழியாக ஆற்றில் திறந்து விடப்பட்டது. ஆழியாறுக்கு வினாடிக்கு, 1,811 கனஅடி நீர் வரத்தாகவும், 2,055 கனஅடி நீர் வெளியேற்றமாகவும் இருந்தது.
உடுமலை அடுத்துள்ள, திருமூர்த்தி அணையின், 60 அடி உயரத்தில், 50.44 அடிக்கு நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 959 கனஅடி நீர்வரத்தாகவும், 1,162 கனஅடி நீர் வெளியேற்றமாகவும் இருந்தது.பி.ஏ.பி., திட்டத்திலுள்ள அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளதால், இந்தாண்டு பாசனத்துக்கு தண்ணீர் வழங்குவதில் சிக்கல் இருக்காது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
மழையளவு விபரம்!
நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழையளவு விபரம் (மில்லி மீட்டரில்):சோலையாறு -144, பரம்பிக்குளம் - 106, வால்பாறை - 73, மேல்நீராறு - 116, கீழ்நீராறு - 156, காடம்பாறை - 23, மேல்ஆழியாறு - 19, ஆழியாறு - 23, சர்க்கார்பதி - 25, மணக்கடவு - 79, துணக்கடவு - 48, பெருவாரிப்பள்ளம் - 36, பொள்ளாச்சி - 97, நவமலை -26, நல்லாறு - 15, நெகமம் - 65, பெதப்பம்பட்டி - 47 என்ற அளவில் மழை பெய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X