கேரளாவுக்கு ரூ.5 கோடி நிதி உதவி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கேரளாவுக்கு ரூ.5 கோடி நிதி உதவி

Added : ஆக 10, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கேரளாவுக்கு 5 கோடி நிதி உதவி

சென்னை:கேரளாவில் வெள்ள நிவாரண பணிகள் மேற்கொள்ள, தமிழக அரசு சார்பில், ஐந்து கோடி ரூபாய் வழங்க, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.அவரது அறிக்கை: கேரளாவில் பெய்த கன மழை மற்றும் வெள்ளத்தால், சில மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை மற்றும் வெள்ளத்தால், இறந்தவர்களின் குடும்பத்திற்கு, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்டமைப்பை ஏற்படுத்துவது, கேரள அரசுக்கு சவாலான பணியாகும். உடனடி உதவியாக, கேரள அரசுக்கு, ஐந்து கோடி ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன். தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய, தமிழக மக்களும், தமிழக அரசும் தயாராக உள்ளோம்.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
saami adimai - san francisco,பெலிசி
11-ஆக-201805:02:35 IST Report Abuse
saami adimai நல்ல பாருங்க சாமி. ஐந்து கோடி கொடுத்துவிட்டு ஐநூறு கோடிகளுக்கு கணக்கு எழுதி இருப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
BJRaman - Chennai,இந்தியா
10-ஆக-201818:09:31 IST Report Abuse
BJRaman தூத்துக்குடி ஞாபகம் இருக்கா முதல்வரே? தூத்துக்குடி போய் விட்டு, அப்படியே கேரளா போய் விட்டு வரவும்.
Rate this:
Share this comment
saami adimai - san francisco,பெலிசி
11-ஆக-201805:01:31 IST Report Abuse
saami adimaiஅங்கு இவருக்கு யாரும் ஒட்டு போட போவதில்லை. பன்னீருக்கு அங்கு கிடைக்க இருந்த நாலு ஓட்டையும் நாசம் செய்து விட்டார் எடப்பாடி....
Rate this:
Share this comment
Cancel
உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி - உண்மையூர் ,இந்தியா
10-ஆக-201815:59:33 IST Report Abuse
உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி அப்படியே அவனுங்க சென்னை மழைக்கு அனுப்பிய வாஷிங் சோடாவை அப்படியே அவர்களுக்கு அனுப்பி வைக்கவும்... எல்லாருக்கும் கஷ்டம் வரும் என்பதை இடித்து காட்டவும்.... இப்படிக்கு... சென்னை தமிழன்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X