'அடங்கல்' பெறுவதும் எளிமையாக மாறியது எல்லாம் 'இ--மயம்': விவசாயிகளின் சிரமம் குறைய ஒரு வாய்ப்பு| Dinamalar

தமிழ்நாடு

'அடங்கல்' பெறுவதும் எளிமையாக மாறியது எல்லாம் 'இ--மயம்': விவசாயிகளின் சிரமம் குறைய ஒரு வாய்ப்பு

Updated : ஆக 10, 2018 | Added : ஆக 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
'அடங்கல்' பெறுவதும் எளிமையாக மாறியது  எல்லாம் 'இ--மயம்': விவசாயிகளின் சிரமம் குறைய ஒரு வாய்ப்பு

திருப்பூர்:'சிட்டா' பெறும் சேவை கம்ப்யூட்டர் மயமானது போல், 'அடங்கல்' பெறுவதும் எளிமையாக மாறியுள்ளது. தமிழக அரசின் 'இ-------அடங்கல்' திட்டம், விரைவில், நடைமுறைக்கு வரவுள்ளது.ஒவ்வொரு தேவைக்கும், வருவாய்த்துறையின் சான்றிதழ் கட்டாயம் என்பதால், விவசாயிகளும், வருவாய்த்துறையும், 'பிரிக்க முடியாத' துறைகளாக மாறி விட்டது. சிறு, குறு விவசாயிகள் சான்று, சிட்டா, அடங்கல், நில உரிமை சான்று என, ஒவ்வொரு தேவைக்கும், கிராம நிர்வாக அலுவலகத்தையே சார்ந்துள்ளனர்.
மத்திய, மாநில அரசுகளின் மானிய திட்டம், உர மானியம் உட்பட, அனைத்து வகையான தேவைகளுக்கும், சிட்டா - அடங்கல் விவரம் அவசியம். ஒவ்வொரு ஆண்டும், ஆறு மாதங்களுக்கு ஒருமுறையும், சிட்டா - அடங்கல் விவரத்தை பெற வேண்டியுள்ளது.எனவே, பொதுமக்கள், விவசாயிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில், கடந்த ஆண்டு முதல், பட்டா, சிட்டா, புல வரைபடம் பெறும் சேவை, 'இ--சேவை' மையத்துக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு. சிறு, குறு விவசாயிகள் சான்று வழங்கப்படுகிறது.
பயிர்க்கடன், இழப்பீடு, வறட்சி நிவாரணம், மானிய திட்டம் ஆகியவற்றை பெறவும், காப்பீடு செய்யவும், அடங்கல் கட்டாயம். இதுவரை இருந்த சிரமம் குறைந்து, அடங்கல் பெறவது எளிதாகியுள்ளது. மின்னாளுமை திட்டத்தின் அதிவேக வளர்ச்சியால், அடங்கல் பெறுவதில் இருந்த சிரமமும் குறைந்துள்ளது. 'இ--சேவை' மையங்களிலேயே, எளிய முறையில் அடங்கல் பெறும் வசதி, விரைவில் நடைமுறைக்கு வருகிறது.
இதற்கான பயிற்சி கூட்டம், சப்-கலெக்டர்கள் ஷ்ரவன் குமார், கிரேஸ் பச்சாவு முன்னிலையில் நடந்தது. தாசில்தார், நில வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ., வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் புள்ளியியல் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.பங்கேற்றவர்களுக்கு 'பவர் பாயின்ட்' மூலமாக, பயிற்சி அளிக்கப்பட்டது.
இதுகுறித்து வருவாய் துறையினர் கூறியதாவது:விளை நிலங்களுக்கு வி.ஏ.ஓ., சென்று, அங்கிருந்தே, அடங்கல் விவரத்தை பதிவு செய்யலாம். விவசாயிகளும், தங்களது சாகுபடி விவரங்களை, 'ஆன்லைன்' மூலம் பதிவேற்றம் செய்யலாம். இரு பதிவுகளையும், துணை தாசில்தார், வேளாண் அலுவலர்கள் ஆய்வு செய்து, உறுதி செய்வர்.
வேளாண்துறை, தோட்டக்கலை, புள்ளியியல் துறையினர் பரிந்துரை அடிப்படையில், தாசில்தார் ஒப்புதல் அளிப்பார். அதன் பின், விவசாயிகள், 'இ--சேவை' மையங்களில், அடங்கல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பயிர் சாகுபடி அடிக்கடி மாறும் என்பதால், ஒவ்வொரு மாதமும், 25ம் தேதிக்குள், அடங்கல் விவரம், 'ஆன்லைன்' மூலம் பதிவு செய்யப்படும்.
பயிர் காப்பீடு, வங்கிக் கடன், விவசாய நகைக்கடன், மானியம் வழங்குவது உள்ளிட்ட தேவைகளுக்கு 'ஆன்லைன்'மூலம், அடங்கல் விவரங்களை சரி பார்க்கலாம். பயிற்சி முடிந்து, விரைவில் இந்த சேவை நடைமுறைக்கு வரும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X