தி.மு.க.,வுக்கு புது ரத்தம் பாய்ச்சிய 'மெரினா' சர்ச்சை!தேர்தல் வரட்டும் என கட்சியினர் கங்கணம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வுக்கு புது ரத்தம் பாய்ச்சிய 'மெரினா' சர்ச்சை!தேர்தல் வரட்டும் என கட்சியினர் கங்கணம்

Added : ஆக 10, 2018 | கருத்துகள் (1)
Advertisement

'உடன்பிறப்பே...' என விளித்து, நெஞ்சமெல்லாம் தங்களை நிரப்பி வைத்திருந்த தலைவருக்கு, மெரினாவில் இடம் தர மறுத்த சர்ச்சை, தி.மு.க.,வினரை உசுப்பி விட்டிருக்கிறது. அடுத்த தேர்தல் எது வந்தாலும், ஒரு கை பார்த்து விடும் முடிவுக்கு வந்துள்ளனர்.மெரினாவில் இடம் ஒதுக்கக்கோரி, முதல்வர் பழனிசாமியை சந்தித்து தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டும், அவர் மறுத்துவிட்டார்.வழக்குகள் வாபஸ் பெறப்பட்ட பின்னரும், தமிழக அரசு வழக்கறிஞர் பல்வேறு காரணங்களை சொல்லி வாதிட்டார். அவற்றை ஏற்காத உயர் நீதிமன்றம், மெரினாவில் கருணாநிதியை அடக்கம் செய்வதற்கு அனுமதியளித்தது.இச்சம்பவங்கள் தி.மு.க., தொண்டர்கள் மத்தியில், முதல்வர் பழனிசாமிக்கு எதிரான ஆறாத வடுவாக பதிந்து விட்டது. சூழலை தி.மு.க., தலைவர்கள் சரியாக கையாண்டதன் காரணமாகவே, வெடிக்க இருந்த பெரும் கலவரம் தவிர்க்கப்பட்டது.அடுத்தது என்ன?தமிழக அரசியலின் இரு பெரும் துருவங்களான ஜெயலலிதா, கருணாநிதி இருவரும் மறைந்துவிட்ட நிலையில், இனி வரும் காலங்கள் இரு இயக்கங்களுக்கும் முக்கியமானது. மெரினா இட ஒதுக்கீடு போராட்டம், தொண்டர்கள் மனதில், ஆறாத வடுவாக பதிந்து விட்டது.இந்த உணர்வுபூர்வமான விஷயம், அ,தி.மு.க.,வுக்கு எதிரான, தீவிரமான நிலைப்பாட்டை எடுக்க ஸ்டாலினை நிச்சயம் துாண்டுவதாக அமையும் என்கின்றனர் உடன் பிறப்புக்கள்.கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதற்கு, மிக முக்கியமான காரணமாக அமைந்தது, கொங்கு மண்டல தொகுதிகளில் தி.மு.க., அடைந்த தோல்விதான். குறிப்பாக கோவை மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதிகளில், ஒன்றில் மட்டுமே தி.மு.க.,வால் வெற்றி பெற முடிந்தது.மறக்கவே மாட்டோம்தி.மு.க.,வினர் சிலர் கூறுகையில், 'கொங்குமண்டல பகுதியில் கட்சியின் தோல்விக்கு காரணம், உட்கட்சி பூசல்தான் என்பதை புரிந்துகொண்ட செயல் தலைவர் ஸ்டாலின், செயல்படாத நிர்வாகிகள் பட்டியல் எடுத்து, கட்சி பதவிகளை பறித்தார். புதிய நிர்வாகிகளை நியமித்தார். கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் முயற்சியில், தீவிரமாக ஈடுபட்டார். இதனால், அடுத்து எந்த தேர்தல் வந்தாலும், வெற்றிக்கனியை பறித்து, எங்கள் தளபதியின் காலடியில் சமர்ப்பிக்க வெறியாக உள்ளோம். கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தர மறுத்ததை, எங்களால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. தேர்தலில் நிச்சயம் பாடம் புகட்டுவோம்' என்கின்றனர்.உள்ளாட்சித் தேர்தல், பார்லிமென்ட் தேர்தல் என்று அடுத்தடுத்து தேர்தல்கள் வரிசைக்கட்டி நிற்கும் சூழலில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், தொண்டர்கள் மனதில் ஏற்பட்டுள்ள இந்த உணர்வுபூர்வமான எழுச்சியை, சரியாக பயன்படுத்திக்கொள்வாரா? பொறுத்திருந்து பார்ப்போம்!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
10-ஆக-201806:20:48 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan எடப்பாடி சரியாகத் தான் முடிவு எடுத்தார். அம்மாவுக்கு மெரினாவில் இடமளித்ததை எதிர்த்து கோர்ட்டுக்குப் போன வெட்கங்கெட்ட திமுக எடப்பாடியிடம் கேட்கலாமா. கோர்ட் தீர்ப்பு வரும் வரை கட்டுமரத்தை எங்கு புதைப்பது எனத் தெரியாத திமுக வை அடியோடு அழிப்பதுதான் அதிமுகவின் இலட்சியம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X