தமிழுக்கு பேரிழப்பு; கட்சியினர் புகழஞ்சலி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழுக்கு பேரிழப்பு; கட்சியினர் புகழஞ்சலி

Added : ஆக 10, 2018
Advertisement

திருப்பூர்:முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவுக்கு, தமிழுக்கும், சமூக நீதிக்கும் பேரிழப்பு என, திருப்பூரிலுள்ள கட்சியினர் புகழாரம் சூட்டினர்.கருணாநிதியின் மறைவுக்கு, திருப்பூரிலுள்ள பல் வேறு கட்சி நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் கிருஷ்ணன்:சிறுபான்மை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதிகளவில், நலத்திட்டத்தை கொண்டு வந்தவர். கல்வி வளர்ச்சி நாள், விதவை மறுமணம் ஊக்குவிப்பு முக்கிய திட்டங்கள். ஐம்பது ஆண்டு கால அரசியல் தலைவர், ஐந்து முறை முதல்வராக இருந்தவர். அவரது மறைவுக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.ம.தி.மு.க., மாவட்ட அவை தலைவர் நாகராஜ்:இலக்கியத்திலும், மேடை பேச்சிலும், தமிழ் ஆர்வத்திலும் கருணாநிதியை மிஞ்ச யாருமில்லை. இவர் மறைவு, தமிழர்களுக்கும், தமிழுக்கும், சமூக நீதிக்கும் ஏற்பட்ட பேரிழப்பு. அவர் இல்லாத தமிழகத்தை நினைத்து பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. கருணாநிதியின் மறைவையொட்டி, திருப்பூர் மாவட்டத்தில், ஒரு வாரத்துக்கு கட்சி கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும்.த.மா.கா., மாவட்ட தலைவர் ரவிக்குமார்:கருணாநிதி சிறந்த அரசியல் ஞானி. தமிழ் பண்பாளர். அவரது மறைவு தமிழர்களுக்கும், அக்கட்சியினருக்கும் பெரிய இழப்பு. ஓய்வறியாமல் உழைத்து, தமிழை, செம்மொழியாக்கிய தலைவர். சாதுர்யமான அரசியல் நடத்தி, தமிழகத்தை வழிநடத்தினார். அவரை இழந்து வாடும், தி.மு.க., தொண்டர்களுக்கு ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன்.இந்திய கம்யூ., மாவட்ட செயலார் ரவி:திருப்பூர் பனியன் தொழிலில் நெருக்கடி ஏற்பட்ட போது, வரியை முழுமையாக ரத்து செய்தார். பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்தது; துணை மின்நிலையம் அமைத்தது; மாநகராட்சியாகவும், மாவட்டமாகவும், திருப்பூரை தரம் உயர்த்தியது, அரசு மருத்துவமனை, கலைக்கல்லுாரி என, திருப்பூர் மக்களுக்காக, கருணாநிதி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார். அவரது சிந்தனை, தமிழகத்துக்கு வழிகாட்டியாக இருக்கும். மா.கம்யூ., மாவட்ட செய லாளர் முத்துக்கண்ணன்சமூகநீதி, ஜனநாயகம், மதசார்பின்மைக்காக பாடுபட்ட கருணாநிதி, தமிழ்மொழி மற்றும் தமிழினஇன வளர்ச்சிக்கும், மாநில சுயாட்சிக்கும், இந்தியாவின் இறையாண்மைக்காகவும், 50 ஆண்டுகள் போராடியுள்ளார். வாழ்வில், போராளியாக மட்டுமல்லாது, படைப்பாளியாகவும், ஒரே பாதையில் பயணித்துள்ளார். தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியாவுக்கு அவர் மறைவு பேரிழப்புதான்.கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க, செயல் தலைவர் வெற்றி:தி.மு.க., தலைவர் கருணாநிதி, ஐந்து தலைமுறையினருக்கு முதல்வராக பணியாற்றியுள்ளார். அவர் முதல்வராக இருந்தபோது, விவசாயக்கடன், 7 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது.உழவர் சந்தைகளை தமிழகத்தில் ஏற்படுத்தினார். அதன் மூலம், இன்றளவும், லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வருகிறோம். விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டத்தை அளித்தவர். விவசாயிகளின் வாழ்வு உயர பாடுபட்டவர். அவ ரின் மறைவுக்கு எங்களது அமைப்பின் சார்பில், ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்கிறேன்.கொ.மு.க. தலைவர் பெஸ்ட் ராமசாமி:திருக்குவளை என்னும் சிற்றுாரில் பிறந்து, சிறுவயது முதலே விடாமுயற்சியுடன் உழைத்து முன்னேறி, உலகையே தன்னை உற்று நோக்க வைத்தவர். கதாசிரியர், கவிஞர் எனத் துவங்கி, கையெழுத்து பிரதியிலிருந்து கம்ப்யூட்டர் காலம் வரை ஓயாமல் எழுத்துப் பணியாற்றியவர். அரசியலில் 80 ஆண்டு, சட்டசபையில், 50 ஆண்டு, 13 முறை தோல்வியே காணாத வெற்றி மற்றும் வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவர் சிலை அவர் பெயர் கூறுபவை. சமத்துவபுரம், மருத்துவ காப்பீடு, கைரிக் ஷா ஒழிப்பு, உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அளித்தவர். சொம்மொழி மாநாடு நடத்தி, தமிழுக்கு பெருமை சேர்த்தவர். அவரது மறைவு, தமிழுக்கும், தமிழகத்துக்கும் பேரிழப்பு. பா.ம.க., மாநில பொதுக்குழு உறுப்பினர் வடிவேல்:தி.மு.க., தலைவர் கருணாநிதி, தமிழுக்கும், தமிழ் நாட்டுக்கும் ஆற்றிய அரும்பணிகள் என்றும் அவர் பெயர் கூறும் வகையில் இந்த நாடு உள்ளவரை நிலைத்திருக்கும். எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர், அரசியல் வித்தகர், தலைசிறந்த ஆட்சியாளர் என பன்முகம் கொண்டவர். தமிழகத்தின் வளர்ச்சியில் அவர் ஆற்றிய பணிகள் அளவிட முடியாயது. அன்னாரது மறைவு தமிழக அரசியலிலும், தமிழ் மொழி உள்ள இடங்களிலும் ஒரு பேரிழப்பு. இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்:தி.மு.க., வின் தலைவரும், தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதியின், மறைவுக்கு இந்து முன்னணி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது பிரிவால் வாடும், தி.மு.க., தொண்டர்களுக்கு ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன்.பா.ஜ., கட்சி வடக்கு மாவட்ட தலைவர் சின்னசாமி:கருணாநிதி தனது ஆட்சி காலத்தில் பல திட்டங்களை கொண்டு வந்தார். அவருடைய மறைவு, தமிழகத்துக்கும் மட்டுமல்ல, தேசிய அரசியலுக்கே பெரிய இழப்பு. தமிழுக்கு அவர் ஆற்றிய பணிகளை யாராலும், மறைக்கவோ, மறுக்கவோ முடியாது.ஆம் ஆத்மி மாநில செய்தி தொடர்பாளர் சுந்தரபாண்டியன்:கருணாநிதி மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், அவர் முதல்வராக இருந்த போது சமத்துவபுரம், சமுதாய கூடம், உழவர் சந்தை என பல திட்டங்களையும், பல தரப்பினருக்கும் கொண்டு வந்தவர். தமிழகம் மட்டுமல்ல, தேசிய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கியவர் என்பது நினைவு கூறத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X