பல்லடம், அவிநாசியில் அஞ்சலி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பல்லடம், அவிநாசியில் அஞ்சலி

Added : ஆக 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

பல்லடம், அவிநாசி மற்றும் வெள்ளகோவிலில், கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பல்லடம் நகர, ஒன்றிய தி.மு.க., சார்பில், என்.ஜி.ஆர்., ரோட்டில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில், கருணாநிதியின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, கடைவீதி, திருச்சி ரோடு வழியாக மவுன ஊர்வலம் நடந்தது. = கணபதிபாளையம் சந்தைப்பேட்டை அருகே, ஒன்றிய பா.ஜ., சார்பில்,அஞ்சலி கூட்டம் நடந்தது. பா.ஜ., நிர்வாகிகள், தி.மு.க., உள்ளிட்ட பிற கட்சியினர், மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர், அவரது படத்துக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். =அருள்புரத்தில் அனைத்து கட்சியின் சார்பில், மவுன ஊர்வலம் நடந்தது. அருள்புரம் பஸ் ஸ்டாப்பில் அமைக்கப்பட்ட கருணாநிதியின் படத்துக்கு, கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். திருப்பூர் ரோட்டில், மவுன ஊர்வலம் நடந்தது. தி.மு.க., காங்., ம.தி.மு.க., தே.மு.தி.க., உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். = கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கத்தின் சார்பில், பல்லடம் உழவர் சந்தை முன் விவசாயிகள் அஞ்சலி செலுத்தினர். கருணாநிதியின் படத்துக்கு மலர் துாவி, மவுன அஞ்சலி செலுத்தினர். வட்டார தலைவர் வேலுமணி தலைமை வகிக்க, கிளை நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். = தமிழ்நாடு அரசு அலுவலர்கள் சார்பில், பல்லடம் ஒன்றிய அலுவலகத்தில் இரங்கல் கூட்டம், நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ரோசன்ராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட ஒன்றியத்தின், அனைத்து மாவட்ட, வட்ட, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்று, கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர். அவிநாசிதி.மு.க., தலைவர் கருணாநிதி மறைவையொட்டி, அவிநாசி, சேவூர், ஆட்டையாம்பாளையம், பூண்டி உட்பட பல இடங்களில், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்காததால், பஸ் ஸ்டாண்ட் வெறிச்சோடி காணப்பட்டது.பெட்ரோல் பங்க், விசைத்தறி கூடங்கள் இயங்கவில்லை. தி.மு.க., உட்பட ம.தி.மு.க., மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில், கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, 'பிளக்ஸ் பேனர்' பல இடங்களில் வைக்கப்பட்டிருந்தது.
வெள்ளகோவில் வெள்ளகோவில் ஒன்றிய, நகர தி.மு.க.,சார்பில், மவுன ஊர்வலம் நடந்தது. கடைவீதி மூன்று கார்னர் சந்திப்பில், கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்து மலர்கள் துாவி மறியாதை செலுத்தப்பட்டது. மருந்து கடைகளை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டன. அண்ணா மன்றத்திலிருந்து பழைய பஸ் ஸ்டாண்ட், கடைவீதி வழியாக புது பஸ்ஸ்டாண்ட் வரை மவுன ஊர்வலம் சென்றது. - நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X