கர்நாடக அணைகளில் இருந்து 1.40 லட்சம் கனஅடிநீர் திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கர்நாடக அணைகளில் இருந்து 1.40 லட்சம் கனஅடிநீர் திறப்பு

Updated : ஆக 10, 2018 | Added : ஆக 10, 2018 | கருத்துகள் (35)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கர்நாடக அணைகள், மேட்டூர் அணை, நீர்திறப்பு, வெள்ளம். கனமழை

தர்மபுரி : கர்நாடகாவில் பருவமழை தீவிரமடைந்து வருவதால் அங்குள்ள அணைகள் அனைத்தும் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. இதனால் காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்திற்கு 1.40 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

கபினி அணையில் இருந்து 80,000 கனஅடியும், கேஆர்எஸ் அணையில் இருந்து 60,000 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு 9000 கனஅடியில் இருந்து 60,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து மீண்டும் அதிகரித்திருப்பதன் காரணமாக ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் 33வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அணைகளில் மீண்டும் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஒரு லட்சம் கனஅடி வரை அதிகரிக்கும் என்பதால் 6 மாவட்டங்களுக்கு மத்திய அரசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேட்டூர் வந்த காவிரி நீர் :

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட உபரிநீர் மேட்டூர் அணையை வந்தடைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 60 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Senthil kumar - coimbatore,இந்தியா
10-ஆக-201817:55:30 IST Report Abuse
Senthil kumar 36 அணைகளை கலைஞர் கட்டியதாக தொலைக்காட்சியில் கூறுபவர்கள் அதை பட்டியிலடவேண்டும் மேலும் இத்தனை அணைகள் கட்டியிருந்தும் ஏன் இவ்வளவு நதிநீர் கடலில் சென்று கலப்பதற்கான காரணத்தயும் கூற முடியுமா ..? இன்றைய அரசியல்வாதிகள் 99 % வாய்ச்சொல் வீரர்கள் மட்டுமே...
Rate this:
Share this comment
Cancel
10-ஆக-201817:02:22 IST Report Abuse
நக்கல் மழை நல்லது... இந்த வருஷம் தமிழ்நாட்டுக்கு நிரய நல்லது நடக்குது... எங்கந்த கோவணம் கட்டின audi கார்காரனை காணும்...
Rate this:
Share this comment
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
10-ஆக-201816:33:20 IST Report Abuse
Loganathan Kuttuva ஆந்திராவில் சந்திரபாபு நாய்டு ஆறுகளை கால்வாய் மூலம் இணைத்து எல்லா பகுதிகளுக்கும் நீர் கிடைக்குப்பின் படி செய்துள்ளார். இதனால் விவசாயம் செழிக்கிறது. அதே போல் இன்றும் ஆறுகளை இணைத்தால் கடலில் கலக்கும் நீரை குறைத்து விடலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X