இருமுறை நீட் தேர்வு : முடிவை மாற்றிய மத்திய அரசு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இருமுறை நீட் தேர்வு : முடிவை மாற்றிய மத்திய அரசு

Added : ஆக 10, 2018 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
நீட் தேர்வு, மனிதவள மேம்பாட்டு துறை, சுகாதாரத்துறை

புதுடில்லி : இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் கூறி இருந்தார். தற்போது தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.

இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அளித்துள்ள பதிலில், 2019 ம் ஆண்டு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முறையில் எந்த மாற்றமும் இல்லை. 2019 ல் ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்தும் எண்ணம் ஏதும் மத்திய அரசுக்கு இல்லை. 2019 ல் குறைந்தபட்சம் ஆஃப்லைன் (offline) முறையில் நீட் தேர்வு தொடர்வது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகத்துடன், மனிதவள மேம்பாட்டு துறை ஆலோசித்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை, மனிதவள மேம்பாட்டு துறைக்கு அளித்த அழுத்தம் காரணம் 2019 ல் பிப்ரவரி மற்றும் மே மாதங்கள் என இருமுறை நீட் தேர்வு நடத்தும் யோசனை மறு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், பேப்பர் - பேனா முறையிலேயே தேர்வை தொடர வேண்டும் எனவும் சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-ஆக-201800:48:05 IST Report Abuse
ஆப்பு இவங்க பொழப்பே இதுதான்...மொதல்ல ஒரு டம்மி அமைச்சரை வுட்டு ஏதாவது சொல்லி ஆழம் பார்ப்பது...ஒர்கவுட் ஆகலேன்னா, பின்னாடியே அதை மறுத்து அறிக்கை....நல்லாவெ இவங்களுக்கு ஒர்கவுட் ஆகுது....
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
11-ஆக-201800:29:31 IST Report Abuse
Mani . V கிராமப்புற மாணவர்கள் கனவிலும் "மருத்துவர் ஆக வேண்டும்" என்று நினைக்கவே கூடாது. எப்படியும் இந்தியாவை எங்கள் பதவி காலத்துக்குள் குட்டிச்சுவர் ஆக்கியே தீருவோம்.
Rate this:
Share this comment
Cancel
MIRROR - Kanchipuram,இந்தியா
10-ஆக-201817:22:01 IST Report Abuse
MIRROR சரியான முடிவெடுக்க முடியாமல் தடுமாறும் பாஜக அரசு. அரசு தனது நிர்வாகத்தில் தடுமாறுவதையே காட்டுகிறது. தனது ஒவ்வொரு அறிவிப்பிற்கும் பின்னால் அதன்படி உடனடியாக செயல்பட கோடிக்கணக்கான மாணவர்கள் உள்ளனர் என்பதை மறந்துவிட்டு நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் என்ற வகையில் தனது நிலைப்பாட்டை மாற்றி வருகிறது, அனைத்திற்கும் மேலாக சிபிஎஸ்இ அமைப்பு முக்கியத்துவம் வாய்ந்த தேர்வுகளை நடத்துவதில் தடுமாற்றம் தெரிவதாக அனைவரும் கருதுகின்றனர். பாதிக்கப்படுவது ஏழை எளிய குடும்பத்தைச் சார்ந்த மாணவர்கள் மட்டுமே. அரசு தனது உறுதியான தெளிவான அறிவிப்பை வெளியிடுவது நல்லது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X