Pakistan should stop 'state repression' in Balochistan: India | பலுசிஸ்தானில் அடக்குமுறை: இந்தியா கவலை| Dinamalar

பலுசிஸ்தானில் அடக்குமுறை: இந்தியா கவலை

Added : ஆக 10, 2018 | கருத்துகள் (25)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பலுசிஸ்தான், அடக்குமுறை, இந்தியா, பாகிஸ்தான், கவலை, Pakistan, state repression, Balochistan, India

புதுடில்லி: பலுசிஸ்தானில், அரசின் அடக்குமுறைகளையும், மனித உரிமை மீறலையும் பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என இந்தியா கூறியுள்ளது.

இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவிஸ் குமார் கூறுகையில், இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலை தெளிவாக உள்ளது. தனது நாட்டில் வசிக்கும் சிறுபான்மையினரை, சர்வதேச விதிப்படி பாகிஸ்தான் கவனித்து கொள்ள வேண்டும். பலுசிஸ்தானில் அடக்குமுறைகளையும் மனித உரிமை மீறலில் ஈடுபடுவதையும் அந்த நாடு நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
10-ஆக-201818:57:25 IST Report Abuse
r.sundaram காஷ்மீரில் ஷரத்து முன்னூர்த்தி எழுபதை நீக்கிவிட்டு வெளி மாநிலத்தவர் அங்கு குடியேறலாம், சொத்துக்கள் வாங்கலாம் சொத்து உரிமை உண்டு என்று சட்டம் கொண்டுவந்தால் காஷ்மீர் பிரச்சனை எளிதாக தீர்ந்துவிடும்.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
10-ஆக-201815:29:12 IST Report Abuse
இந்தியன் kumar காசுமீருக்கு அளிக்கப்பட்டுள்ள 370 சிறப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்குமுள்ள சட்ட திட்டங்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கும் பொருந்த வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Jey Kay - jeykay@email.com - Melbourne,ஆஸ்திரேலியா
10-ஆக-201814:08:33 IST Report Abuse
Jey Kay - jeykay@email.com பாகிஸ்தான் மேலும் உடைவதற்கு வாய்ப்பு இல்லை, அங்கு பிடி ராணுவத்தின் கையில் இருக்கிறது. மக்களாட்சி என்பதெல்லாம் பெயரளவில் மட்டுமே. ஒருவேளை அவ்வாறு உடைந்தால் இந்தியாவிற்கு அகதிகளின் வருகை மேலும் அதிகமாகும். ராகுல், மம்தா, கெஜ்ரிவால் போன்ற தேசத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட தலைவர்கள் அகதிகளுக்கு முட்டு கொடுப்பார்கள். ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக இருப்பதால், அகதிகளை எளிதாக நாடு கடத்த முடியாது. அதே அகதிகள் இங்கும் தனது அமைதி வேலையே கையிலெடுப்பார்கள். சிரியா அகதிகள் ஐரோப்பாவில் தஞ்சம் புகுந்து அங்கு அமைதியின் கைவரிசையை ஐரோப்பாவிற்கு காட்டிவருவது ஒரு உதாரணம். நமது பொருளாதார முன்னேற்றத்திற்கு அகதிகள் பாரமாக இருப்பார்கள். ஏற்கனவே காஷ்மீரில் இருக்கும் திருகுவலியை சமாளிப்பதற்க்கு நாம் அதிகம் செலவிடுகிறோம். பாகிஸ்தான் தோன்ற காரணமாக இருந்த அடிப்படை சித்தாந்தமே தவறு, அதையே அவர்கள் இன்றுவரை பற்றிக்கொண்டிருப்பது அவர்கள் மேன்மேலும் செய்துவரும் தவறு. அங்கு அமைதி ஏற்படுவது என்பது கானல் நீராகவே அமையும். வலுவான மக்களாட்சியுடனும், வலுவான பொருளாதாரத்துடனும், மதச்சார்பு அற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கையுடைய வலுவான பாகிஸ்தானே நமது இன்றைய தேவை. ஆனால் இந்த மூன்றில் ஒன்று கூட அங்கு நடக்கப்போவதில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X