கருணாநிதி சமாதியில் கண்ணீர் அஞ்சலி: கொட்டும் மழையில் குடும்பத்தினர் மரியாதை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி சமாதியில் கண்ணீர் அஞ்சலி: கொட்டும் மழையில் குடும்பத்தினர் மரியாதை

Added : ஆக 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கருணாநிதி சமாதியில் கண்ணீர் அஞ்சலி: கொட்டும் மழையில் குடும்பத்தினர் மரியாதை

சென்னை:கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில், இரவில், கொட்டும் மழையில், கருணாநிதியின் குடும்பத்தினர் வந்து, மலர் அஞ்சலி செலுத்தினர்.சென்னை, கடற்கரை சாலையில் கருணாநிதியின் உடல், நேற்று முன்தினம் நல்லடக்கம் செய்யப்பட்டது. நேற்று, காலை, 10:00 மணிக்கு, கவிஞர் வைரமுத்து வந்தார். கருணாநிதியின் சமாதி மீது, பால் ஊற்றி, அஞ்சலி செலுத்தினார். காலை, 11:30 மணிக்கு, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், மலர் மாலைகள் வைத்தும், மலர் துாவியும் வணங்கினர். அதன்பின், நடிகை திரிஷா, பிரமுகர்கள் வந்து மரியாதை செலுத்தினர். இரவு, 7:45க்கு, கொட்டும் மழையில், கருணாநிதி குடும்பத்தினர் அனைவரும், நினைவிடத்திற்கு வந்தனர். கருணாநிதியின் துணைவி ராஜாத்தி, மகன்கள் அழகிரி, ஸ்டாலின், தமிழரசு, மகள்கள் செல்வி, கனிமொழி ஆகியோர், கருணாநிதியின் சமாதி மீது, மலர் மாலை வைத்து, அஞ்சலி செலுத்தினர். மற்ற குடும்ப உறுப்பினர்களும் அஞ்சலி செலுத்தினர்.


முகநுால் படம் மாற்றம்:

கருணாநிதி மறைந்ததை தொடர்ந்து, நேற்று மதியம், 12:00 மணியளவில், அவரது முகநுால் முகப்பில் சக்கரநாற்காலியும், மஞ்சள் துண்டும், கண்ணாடியும் இருந்தது. மாலை, 4:00 மணியளவில், முகப்பு படம் மாற்றப்பட்டு, மீண்டும் கருணாநிதியின் படம் வைக்கப்பட்டது.

பேனா வைத்த பேரன்: கருணாநிதி உடலை நல்லடக்கம் செய்வதற்கு முன், அவருடைய சட்டை பையில், பேனா இல்லை என்பதை கனிமொழியின் மகன் ஆதித்யா கவனித்துள்ளார். உடனே அவர் அருகில் நின்றிருந்த, அரசு அதிகாரியிடம் பேனாவை வாங்கி கருணாநிதியின் சட்டை பையில் வைத்து வணங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X