முஸ்லிமை மணந்த இந்து பெண்ணுக்கு இறுதிச்சடங்கு மறுப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

முஸ்லிமை மணந்த இந்து பெண்ணுக்கு இறுதிச்சடங்கு மறுப்பு

Updated : ஆக 10, 2018 | Added : ஆக 10, 2018 | கருத்துகள் (68)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
டில்லி, இந்து பெண், முஸ்லிமை மணந்த பெண், இறுதிச்சடங்கு, கோயில் நிர்வாகம்

புதுடில்லி : மேற்குவங்க அரசில் வணிக வரித்துறையில் துணை கமிஷனராக பணியாற்றி வருபவர் இம்தியாஜூர் ரஹ்மான். இவரும் இந்துவான இவரது மனைவி நிவேதிதா கட்டாக்கும், 20 ஆண்டுகளுக்கு முன் கலப்புத் திருமண சட்டத்தின்படி திருமணம் செய்து கொண்டவர்கள்.


இறுதிச் சடங்கு மறுப்பு:


இந்நிலையில் உடல் உறுப்புக்கள் பலவும் செயலிழந்ததால் நிவேதிதா கடந்த வாரம் உயிரிழந்தார். நிவேதிதாவின் கடைசி விருப்பப்படி அவரது இறுதி சடங்குகளை செய்ய நினைத்த ரஹ்மான், டில்லியில் பெங்காளிகள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள காளி கோயிலில் ஆக.12 அன்று இறுதிசடங்குகள் செய்ய ரூ.1300 பணம் செலுத்தி பதிவு செய்துள்ளார்.
ஆனால், அவர் இறுதிச் சடங்கு செய்ய முடியாது என கூறி, கோயில் நிர்வாகம் அவரது முன்பதிவை ரத்து செய்தது. கோயில் நிர்வாக தலைவர் அஷிதவ் பவ்மிக்கிடம் கேட்ட போது, ரஹ்மானின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதற்கு ஒரே காரணம் தான். அவர் தனது அடையாளத்தை மறைத்து, மகள் இஹினி அம்பிரீன் பெயரில் முன்பதிவு செய்துள்ளார். எங்களுக்கு சந்தேகம் எழுந்ததால் அப்பெண்ணின் கோத்திரம் பற்றி கேட்டோம்.
அது குறித்து இவர்களால் பதில் சொல்ல தெரியவில்லை. ஏனெனில் முஸ்லிம்கள் கோத்திர முறையை கடைப்பிடிப்பதில்லை. இறந்த பெண், இந்து கலாச்சாரத்தை கடைப்பிடித்திருந்தாலும், முஸ்லிமை மணந்து கொண்டதால் அவரை இந்துவாக கருத முடியாது. அவரது இறுதிச்சடங்குகளை கோயிலில் செய்ய அனுமதிக்க முடியாது.
ஆனால், மனைவியின் விருப்பப்படியே இறுதி சடங்கை செய்ய தான் விரும்புவதாக கூறும் ரஹ்மான், இன்னமும் இறுதிச்சடங்களை செய்யாமல் இருந்து வருகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
varun - ,
11-ஆக-201809:29:06 IST Report Abuse
varun என்னோட தாத்தா கடைசி ஆசையா அப்போது பிரதமராக இருந்த ராஜீவை பாக்கனும்னாரு முடியலையே.....
Rate this:
Share this comment
Cancel
vasumathi - Sydney,ஆஸ்திரேலியா
11-ஆக-201806:38:08 IST Report Abuse
vasumathi முட்டாள் தனமான வாதம். சனாதன தர்மத்தில் அனைவரும் சமம். இந்து என்பது சட்டத்தில் தவிர சமூகத்தில் இல்லை. உருவம் அற்ற வழிபாடான இஸ்லாம் சனாதன தர்மத்திலும் இருக்கிறது. இறந்தபிறகு மதத்தை பற்றி நினைக்காமல் செய்ய வேண்டியதை செய்வோம். ஒரு நல்ல தமிழ் ப்ரோஹிதரை டெல்லியில் வைத்து செய்யுங்கள். திதி திவசம் எது ஆகினும்.
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
11-ஆக-201810:44:49 IST Report Abuse
Nallavan Nallavanஎதுக்குங்க தமிழ் புரோகிதர் ? அந்தம்மா மேற்கு வங்கத்தைச் சார்ந்தவர் .... அவர்களின் சம்பிரதாயம் வேறு .......
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
11-ஆக-201804:11:51 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மதம் என்றால் அசிங்கம் என்பது இங்கு பட்டவர்த்தனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X