நேரு பற்றி கருத்து: தலாய்லாமா மன்னிப்பு | Dinamalar

பொது செய்தி

இந்தியா

நேரு பற்றி கருத்து: தலாய்லாமா மன்னிப்பு

Added : ஆக 10, 2018 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
தலாய் லாமா, நேரு, ஜின்னா

பனாஜி: முன்னாள் பிரதமர் நேரு குறித்து தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்டு கொள்வதாக புத்த மத தலைவர் தலாய் லாமா கூறியுள்ளார்.


சர்ச்சை

கடந்த சில நாட்களுக்கு முன், கோவா மாநில தலைநகர் பனாஜியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புத்த மத தலைவர் தலாய் லாமா பேசுகையில், சுதந்திரத்திற்கு பின் முகமது அலி ஜின்னா பிரதமராக பதவியேற்க வேண்டும் என மஹாத்மா காந்தி விரும்பினார். இதனை நேரு ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கு நேருவிடமிருந்த சிறிய சுயநலம் காரணமாக இருக்கலாம்.
மஹாத்மா காந்தி விருப்பம் ஏற்கப்பட்டிருந்தால், இந்தியா பாகிஸ்தான் ஒற்றுமையாக இருந்திருக்கும். நேருவை எனக்கு நன்றாக தெரியும். நல்ல அனுபவசாலி. ஆனால் சில நேரம் தவறு நடக்கும் எனக்கூறியிருந்தார். தலாய் லாமாவின் இந்த கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.




மன்னிப்பு

இதனையடுத்து தலாய் லாமா மன்னிப்பு கோரியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: எனது கருத்து சர்ச்சையை உருவாக்கிவிட்டது. நான் கூறியதில் தவறு இருக்குமானால், மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-ஆக-201820:46:21 IST Report Abuse
செயலாளர் பயனீட்டாளர் சங்கம் வேடனிடம் தப்பித்து தன் மடியில் விழுந்த புறா, தன்னிடம் அடைக்கலம் கேட்டதாக எண்ணி, அதனைக்காப்பாற்ற - அந்த புறாவிற்குப் பதிலாக தன் சதையை அரிந்து வேடனுக்கு கொடுத்த சிபிச்சக்ரவர்தி கதையை நாமெல்லோரும் அறிவோம்.. ஆனால், நம் பாரத மண்ணில் 20 ஆம் நூற்றாண்டின் சிபிச்சக்ரவர்த்தியாக .... அமரர் நேரு அவர்கள்.. சீனாவால் தேசத்துரோகக்குற்றம் சாட்டப்பட்டு, திபெத்தில் சீன படைகளிடம் சிக்காமல் தப்பித்து இந்தியா வுக்கு வந்த இந்த தலாய்லாமா, நேருவால் அடைக்கல பொருளாக கருதப்பட்டு... சீனாவிடம் தலாய்லாமாவை ஒப்படைக்காத காரணத்தால் -காழ்ப்புணர்ச்சியால், வல்லரசாகத் திகழ்ந்த சீனா... நீதி-நேர்மை இவைகளை கடைப்பிடிக்கும் இந்தியாமேல் போர்தொடுத்து பல ஆயிரம் பாரத வீர்களின் இன்னுயிர்களையும், பாரத மண்ணையும் நம் பாரதம் இழந்து ..... அய்யகோ.. இந்த தலாய்லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்த அநியாய காரியத்தை நேரு மட்டும் செய்யாமல் இருந்திருந்தால் ? ... தலாய்லாமாவை சீனாவிடம் ஒப்படைத்திருந்தால்.. தலாய்லாமாவின் கதையும் அப்போதே முடிந்திருக்கும்... சீனாவும் நமக்கு நெருங்கிய நட்பு நாடாக ... நம் நாட்டின் மேல் மிகுந்த அன்பு கொண்ட நாடாகவும் அப்போதிலிருந்தே திகழ்ந்திருக்கும்.. இந்த நேருவுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
ஆ.தவமணி, - காந்திபுரம் சேந்தமங்கலம், நாமக்கல்.,இந்தியா
10-ஆக-201820:43:03 IST Report Abuse
ஆ.தவமணி,   வேடனிடம் தப்பித்து தன் மடியில் விழுந்த புறா, தன்னிடம் அடைக்கலம் கேட்டதாக எண்ணி, அதனைக்காப்பாற்ற - அந்த புறாவிற்குப் பதிலாக தன் சதையை அரிந்து வேடனுக்கு கொடுத்த சிபிச்சக்ரவர்தி கதையை நாமெல்லோரும் அறிவோம்.. ஆனால், நம் பாரத மண்ணில் 20 ஆம் நூற்றாண்டின் சிபிச்சக்ரவர்த்தியாக .... அமரர் நேரு அவர்கள்.. சீனாவால் தேசத்துரோகக்குற்றம் சாட்டப்பட்டு, திபெத்தில் சீன படைகளிடம் சிக்காமல் தப்பித்து இந்தியா வுக்கு வந்த இந்த தலாய்லாமா, நேருவால் அடைக்கல பொருளாக கருதப்பட்டு... சீனாவிடம் தலாய்லாமாவை ஒப்படைக்காத காரணத்தால் -காழ்ப்புணர்ச்சியால், வல்லரசாகத் திகழ்ந்த சீனா... நீதி-நேர்மை இவைகளை கடைப்பிடிக்கும் இந்தியாமேல் போர்தொடுத்து பல ஆயிரம் பாரத வீர்களின் இன்னுயிர்களையும், பாரத மண்ணையும் நம் பாரதம் இழந்து ..... அய்யகோ.. இந்த தலாய்லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்த அநியாய காரியத்தை நேரு மட்டும் செய்யாமல் இருந்திருந்தால் ? ... தலாய்லாமாவை சீனாவிடம் ஒப்படைத்திருந்தால்.. தலாய்லாமாவின் கதையும் அப்போதே முடிந்திருக்கும்... சீனாவும் நமக்கு நெருங்கிய நட்பு நாடாக ... நம் நாட்டின் மேல் மிகுந்த அன்பு கொண்ட நாடாகவும் அப்போதிலிருந்தே திகழ்ந்திருக்கும்.. இந்த நேருவுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
10-ஆக-201820:15:35 IST Report Abuse
Kuppuswamykesavan இந்த இரு நாடுகளும் ஒரே நாடாக, 1947-க்கு பிறகும் இருந்து இருந்தால், இன்றைக்கு, அதில், பல பங்களாதேஷ்கள் உருவாகி இருக்குமோ?, என்னவோ.
Rate this:
Share this comment
s.rajagopalan - chennai ,இந்தியா
11-ஆக-201811:57:02 IST Report Abuse
s.rajagopalanசரியாய் சொன்னீங்க...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X