ஆக.16 வரை திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆக.16 வரை திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி

Updated : ஆக 10, 2018 | Added : ஆக 10, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
திருப்பதி, திருமலை, தரிசனம்

திருப்பதி: திருப்பதி திருமலை கோயிலில், திவ்யதரிசன டோக்கன்கள், சர்வ தரிசன டோக்கன்கள் ஆகியவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி வெளியிட்ட அறிக்கை: திருமலை கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அஷ்டபந்தன பாலாலய மகா சம்ப்ரோக்ஷணம் ஆக.11 முதல் 16 வரை நடைபெறுகிறது. இந்த விழா காலத்தில் ரூ.300 தரிசன டிக்கெட்கள், திவ்ய தரிசன டோக்கன்கள், சர்வ தரிசன டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர் இடையீட்டு தரிசனம், ஆர்ஜித சேவா டிக்கெட்கள், முதியோர், மாற்றுத்திறனாளி, பச்சிளம் குழந்தைகளுடனான பெற்றோருக்கான சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த காலத்தில் வேத சம்பிரதாய சடங்குகள் நடக்கும் காரணத்தால், கிடைக்கப்பெறும் குறைந்தளவு காலத்தில் 18 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரையான யாத்ரீகர்களுக்கு மட்டும் தரிசனம் சாத்தியமாகும். 16 ஆம் தேதி வரை பூஜைகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் இலவச தரிசனத்துக்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
10-ஆக-201818:14:53 IST Report Abuse
Lion Drsekar திருக்கோவிகளுக்கு சென்றால் ஒரு மன நிம்மதி என்பதே இல்லை, மாறாக மனித நேயமற்ற முறையில் அவமானப்படுத்துதல், லஞ்சம், செல்லுமிடமெல்லாம் லஞ்சம். வண்டி நிறுத்த பணம், ஊருக்குள் நுழைய பணம், தேங்காய் பலம் வாங்குமிடத்திலும் ஏமாற்றுவேலைகள், சாமி கும்பிடும் வரை மனதில் ஒரு பரபரப்புடன் , நிம்மியற்ற சூழலில் இருக்கிறது, ஒரு அமைதி, மன நிறைவு எல்லாம் கிராமங்களில் உள்ள புராதன திருக்கோவிகளில் மட்டுமே இருக்கிறது, மற்ற இடங்களில் பணம் ஒன்றே முக்கிய பங்கு வகிக்கிறது, அதுவும் திருப்பதில் வேண்டும் என்றே ஆட்டு மந்தைகளைப்போல் அடைத்து வைப்பது, திறந்து விடுவதும், பக்தர்கள் ஓடுவதும். ஒரே வழியில் பலர் கூட்டமாக உள்ளே செல்ல, அவர்கள் பங்கிற்கு நம்மை அசிங்கமாக திட்டி , வெளியே தள்ள,,,,, அந்த இறைவன் தான் இதற்க்கு ஒரு வழி கூறவேண்டும், அவரையே மக்கள் தங்கள் கைகளில் வைத்து பந்தாடும்போது அவர் என்ன செய்யமுடியும் பாசம் வந்தே madaram
Rate this:
Share this comment
Cancel
abhinandan jain - chennai,இந்தியா
10-ஆக-201816:57:27 IST Report Abuse
abhinandan jain தாமஸம்ப்ரோக்ஷ்ணம் நல்லமுறையில் நடக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
10-ஆக-201816:31:29 IST Report Abuse
Lion Drsekar ரூ 300 கொடுத்து டிக்கட் வாங்கினால் அடிமைகளைப் போல் நடத்துவார்கள், இலவசம் என்றால் கேட்கவே வேண்டாம், யார் காட்டில் மழை என்றே தெரிய வில்லை, அனைத்தையும் அறிந்தவன் அந்த இறைவன் மட்டுமே, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X