கருணாநிதிக்கு, 'பாரத ரத்னா' : பார்லிமென்டில் கோரிக்கை Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
கருணாநிதிக்கு, 'பாரத ரத்னா'
பார்லிமென்டில் கோரிக்கை

'தி.மு.க., தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான, கருணாநிதிக்கு, 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும்' என, தி.மு.க., சார்பில், பார்லிமென்டில் கோரிக்கை வைக்கப்பட்டது.

கருணாநிதி, பாரத ரத்னா


ராஜ்யசபாவில், நேற்று, தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவா பேசியதாவது; திராவிட இனத்தின் அடையாளமாக திகழ்ந்தவர் கருணாநிதி. 80 ஆண்டுகள் பொது வாழ்விலும், 50 ஆண்டுகள்

கட்சியின் தலைவராகவும் இருந்தவர். தத்துவ மேதை அவரது புகழ் மகுடத்தில், எழுத்தாளர், பேச்சாளர், இலக்கியவாதி, தத்துவ மேதை, நாடக ஆசிரியர், நடிகர் என, எத்தனையோ பெருமைகள் பதிந்துள்ளன. தான் தடம் பதித்த, அத்தனை துறைகளிலும் முத்திரை பதித்தவர். இணையற்ற அந்த தலைவரின் புகழை, வார்த்தைகளால்விவரிக்க இயலாது. கடைசி மூச்சு வரையில், சமூகநீதி, மதச் சார்பின்மை, மாநில உரிமை, சுயமரியாதை ஆகியவற்றுக்காக போராடியவர்.ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை, இழிவான சொற்களால் அழைக்கப்படுவதை நீக்கி, மதிப்புமிகு சொற்களை சூட்டியவர். குடிசைகள் இருக்கும் இடங்கள் எல்லாம், குடியிருப்புகள் இருக்க வேண்டுமென, செய்தவர்.இத்தகைய பெருமைமிகு தலைவருக்கு, நாட்டின் மிக உயர்ந்த விருதான, 'பாரத ரத்னா' வை வழங்க வேண்டும். அது தான், அவருக்கு செய்யும் பொருத்தமான மரியாதையாக அமையும்.இவ்வாறு, சிவா பேசினார். அப்போது, அனைத்து, எம்.பி.,க்களும், மேஜைகளை தட்டி, வரவேற்பு தெரிவித்தனர். ராஜ்யசபா காலையில் கூடியதும், பல்வேறு பிரச்னைகளை கிளப்ப, எதிர்க்கட்சிகள் தயாராக

Advertisement

இருந்தன.அமைதி : ஆனாலும், முதல் அலுவலாக, மறைந்த தலைவர் கருணாநிதி குறித்து, தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவா பேசப் போகிறார் என்பதை அறிந்ததும், சபையில் உள்ள எல்லா, எம்.பி.,க்களும் அமைதி காத்தனர்.வேறு சில விஷயங்கள் குறித்து பேசவும், எம்.பி.,க்கள் வரிசையில் காத்திருந்தனர். ஆனால், அதற்கெல்லாம் இடம் தராமல், சிவா பேசி முடித்ததுமே, எதிர்க்கட்சிகளின் அமளியும், ரகளையும் துவங்கியது.


Advertisement

வாசகர் கருத்து (232+ 93)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
15-ஆக-201803:22:01 IST Report Abuse

Panneerselvam Chinnasamy2018 அரசியல் கருணாநிதிக்கு பாரதரத்னா குழு அமைப்பு... அட போங்கய்யா... ரப்பர் ஸ்டாம்ப் v . v . கிரி போன்றவர்களுக்கு கொடுப்பீர்கள், ஆனால் சமுதாய மாற்றம், மொழி விடுதலை, மாநில உரிமை, மற்றும் எதேச்சதிகார எமெர்ஜெண்சியை எதிர்த்து போராடிய ஒரு மாவீரனுக்கு தரமாட்டீர்கள்...

Rate this:
Hari Sankar Sharma - Chennai,இந்தியா
14-ஆக-201813:27:28 IST Report Abuse

Hari Sankar Sharmaசேர்த்த சொத்து அனைத்தும் தமிழக அரசை ஏமாற்றிச் சேர்த்தது, என்பதை அறியாமல் பேசும் தமிழக திமுக அரசியல்வாதிகளை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது

Rate this:
koyango - chennai,இந்தியா
14-ஆக-201808:35:21 IST Report Abuse

koyangoஇவருக்கு இதை விட உயரிய விருது வழங்கப்பட்ட ஆக வேண்டும் எதற்கு தெரியுமா. ? ஊழலில் சக்கரவர்த்தி என்பதற்காக. எந்த திட்டம் என்றாலும் அதில் ஒருபகுதி கமிஷன் அதற்காக. கொடுங்கள் கொடுங்கள்

Rate this:
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
15-ஆக-201803:26:35 IST Report Abuse

Panneerselvam Chinnasamyகலைஞர் சொத்து சேர்ப்பதற்கு கட்சி நடத்தவில்லை... அவர்கள் நல்ல நேரம் தமிழில் முதன்முதலில் SUNTV ஆரம்பித்தார்கள்... பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டியது... வாழ்வு வளம் கண்டார்கள்... இதில் பொறாமை படுவதில் பொருள் இல்லை... ஆனால் சிலரோ கமிஷன், கட்டிங் பெறுவதற்க்கே கட்சி நடத்துகிறார்கள்... ஆட்சி அதிகாரம்பெற விரும்புகிறார்கள்... கண்டைனர் கன்டைனராக கொள்ளை அடிக்கிறார்கள்.....

Rate this:
மேலும் 228 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X