ஸ்மார்ட் ரேஷன் கார்டு இழுபறி : ஐந்து மாதமாக நீடிக்கும் சிக்கல் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஸ்மார்ட் ரேஷன் கார்டு இழுபறி
ஐந்து மாதமாக நீடிக்கும் சிக்கல்

திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்பவர்களுக்கு, புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்குவது, ஐந்து மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 ஸ்மார்ட் ரேஷன் கார்டு

தமிழகத்தில், ஸ்மார்ட் ரேஷன் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டு, ஸ்கேன் செய்தால் மட்டுமே பொருட்கள் வாங்கும் நடை முறை

அமலில் உள்ளது. இந்நிலையில், அரசால் வழங்கப்பட்ட ரேஷன் கார்டு களில் திருத்தம்,முகவரி மாற்றம், ஒரு பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு மாற்றம், தொலைந்து போனவை ஆகியவற்றுக்கு மாற்றாக, புதிதாகஸ்மார்ட் கார்டு வழங்குவதில்லை. இது போன்ற கார்டுகள், அரசின், இ - சேவை மையங்கள் வாயிலாக, புதிதாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால், பிப்., மாதம் முதல் நிறுத்தப்பட்டது. ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து, ஐந்து மாதமாக தமிழகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்.
வழங்கல் துறை அதிகாரி கள் கூறுகையில், 'குடிபெயர்ந்தவர்கள், திருத்தம் மேற்கொண்டவர்கள் என, ஒவ்வொரு தாலுகாவிலும், 500க்கும் மேற்பட்டோர், புதிய ஸ்மார்ட் கார்டு கிடைக்காமல், ஐந்து மாதங்களாக காத்திருக்கின்றனர்.

Advertisement

'புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தால், சென்னையிலிருந்து கார்டு வருகிறது; மாற்றம் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு வழங்குவது குறித்து அரசு முடிவு எடுக்காமல் இழுபறியில் உள்ளது' என்றனர்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswanathan Meenakshisundaram - karaikudi,இந்தியா
11-ஆக-201818:12:27 IST Report Abuse

Viswanathan Meenakshisundaramகுறைந்த மதிப்பெண் பெற்று , அரசியல் செல்வாக்கு, இட ஒதுக்கீடு மூலம் அரசு பணியில் சேர்ந்தவர்கள் , வேலை தெரிந்தாலும் ஒழுங்காக வேலை செய்ய மாட்டான் . அலுவலகத்திற்கு வருவதில் தாமதம் , அக்கறையோடு கோப்புகளை சரி பார்த்து வேலை செய்யாமல் வெட்டி பேச்சும் , வீண் அரைட்டையும் , கலைஞர் அதை செய்தார் , அருள்மொழி இப்படி பேசினார் என்று இருப்பவர்களிடம் வேறு எதை எதிர் பார்க்க முடியும் . இப்படி இருப்பதை தானே வீரமணி விரும்புகிறார் . அவர் அலுவலகத்தில் இவ்வாறு வேலை செய்தால் பொறுத்து கொள்வாரா ?

Rate this:
sivan - Palani,இந்தியா
11-ஆக-201812:36:35 IST Report Abuse

sivan முதலில் அரசு ஊழியரால் திறமையானவர்களாக இருக்க வேண்டும்/ தற்போதுள்ள ஊழியர்கள் ஐந்து பேர் சேர்ந்து ஒரு ஆள் வேலையை செய்கின்றனர். திறமையிண்மையை சீர் செய்ய என்ன செய்ய முடியும் என்று பாருங்கள்.

Rate this:
Yezdik Damo - Ch2Ch,இந்தியா
11-ஆக-201814:16:00 IST Report Abuse

Yezdik Damoதிறமையானவர்களுக்கு இங்கே மதிப்பு இல்லை. அதனாலதான் அமேரிக்கா ,ஐரோப்பா அப்படின்னு போயிடறாங்க. கோட்டா சிஸ்டத்தில் வந்த சோம்பேறிங்க கிட்ட என்ன எதிர் பார்க்க முடியும்....

Rate this:
Kannan - Coimbatore,இந்தியா
11-ஆக-201811:08:08 IST Report Abuse

Kannanடிஜிட்டல் இந்தியா ல இதெல்லாம் சாதாரணமப்பா

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X