'டிஜிட்டல்' மயமாகிறது மக்கள் தொகை பதிவேடு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'டிஜிட்டல்' மயமாகிறது மக்கள் தொகை பதிவேடு

Added : ஆக 11, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
டிஜிட்டல், மக்கள் தொகை பதிவேடு

'ஆதார்' விபரங்களுடன் கூடிய, மக்கள் தொகை பதிவேடுகளை, 'டிஜிட்டல்' மயமாக்கும் வகையில், புதிய, 'சாப்ட்வேர்' அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

நாட்டில், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பிறப்பு, இறப்பு, நோய், பொருளாதாரம், மக்கள் தொகை விபரம், சமுதாய வாழ்க்கை உள்ளிட்ட விவரங்களும், மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிடைக்கின்றன. இதன் அடிப்படையில், மத்திய, மாநில அரசுகள், திட்டங்களை தயாரிக்கின்றன. கடந்த, 2011 கணக்கெடுப்பின் அடிப்படையில், தமிழக மக்கள் தொகை, 7.21 கோடியாக இருந்தது. ஆதார் விபரம் பதிவு செய்யப்பட்டதால், 2016ல், மக்கள்தொகை கணக்கெடுப்பு திருத்தப்பணி நடந்தது.

மக்கள்தொகை பட்டியலில் உள்ளவர்களின் ஆதார் உள்ளிட்ட விபரங்கள், மீண்டும் பதிவு செய்யப்பட்டன. பணியாளர்கள், வீடு வீடாக சென்று, மக்களின் விபரங்களை கேட்டு, திருத்தம் மேற்கொண்டனர். சட்டசபை தேர்தல் காரணமாக, அப்பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட, மக்கள் தொகை விபரங்களை, திருத்தம் செய்து, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மக்கள் தொகை பதிவேடுகள் தயாரிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, மாவட்ட வாரியாக, வருவாய்த் துறை அலுவலர்களுக்கான பயிற்சி துவங்கியுள்ளது.
வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியதாவது: மக்கள் தொகை பதிவேடு விபரங்களை, 'ஆன்லைன்' மூலமாக பதிவு செய்ய, புதிய, 'சாப்ட்வேர்' வழங்கப்பட்டுள்ளது. வரும், 20ம் தேதி, மக்கள்தொகை பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி துவங்கி, 90 நாட்களில் நிறைவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியும் நவீனமாகும்.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஆக-201818:42:27 IST Report Abuse
P R Srinivasan நல்லது. மக்கள் தொகை கணினியில் இருப்பது. எல்லா நாடுகளும் இதை தான் பின்பற்றுகின்றனர். ஆனால் இந்த விபரங்கள் சரியாக பாதுகாக்கப்படவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
11-ஆக-201818:40:03 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN ஆதார் தான் இனி முக்கியம் . அடுத்து பேன் எண் (PAN)ஆகியவை ஒரு மனிதனுக்கு இரு கண்கள் போல முக்கியத்துவம் பெறுகின்றன. எல்லாம் டிஜிட்டல் மயமே. இதற்கும் சில எதிர்கட்சியினர் குறை கூறுவார்கள். கோர்ட்டுக்கும் போவார்கள். அது அவர்களின் குணம் மனம்.
Rate this:
Share this comment
Cancel
arun - ,
11-ஆக-201808:54:32 IST Report Abuse
arun இப்பத் தெரிஞ்சு போயிரும் யாரு பிள்ளைகளை அதிகமாக தொழிற்சாலை மாதிரி உற்பத்தி பண்றாங்கன்னு...உற்பத்தி வரி போட்டாத்தான் நாட்டுக்கு நல்லது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X