'This must stop', says SC on Kanwariya violence, vandalism by protesters | கன்வாரியாக்கள் வன்முறை: சுப்ரீம்கோர்ட்டில் காரசார வாதம்| Dinamalar

கன்வாரியாக்கள் வன்முறை: சுப்ரீம்கோர்ட்டில் காரசார வாதம்

Added : ஆக 11, 2018 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கன்வாரியாக்கள் வன்முறை: சுப்ரீம்கோர்ட்டில் காரசார வாதம்

புதுடில்லி: வடமாநிலங்களான உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் சிராவண மாதத்தை முன்னிட்டு மக்கள் கன்வாரியா யாத்திரை எனப்படும் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் யாத்திரையில் பங்கேற்பவர்கள் சில கன்வாரியாக்கள் வாகனங்களை உடைத்து வன்முறையில் ஈடுபட்டதற்கான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின.இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூறியது,
கன்வாரியாக்கள் டில்லியில் வாகனங்களைச் சேதப்படுத்தினர், பத்மாவத் பட விவகாரத்தில் வன்முறைகள் வெடித்தது. சமீபத்தில் மராத்தா இட ஒதுக்கீடு போராட்டத்தின் வன்முறை நடந்தது. இவற்றை தடுக்க உங்கள் ஆலோசனை என்ன என்றார்,
நீதிபதிகள் அமர்வு கூறியது, கன்வாரியாக்களின் வன்முறைகள் ஏற்க முடியாதது , அதிகாரிகள் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், உடனடியாக நிறுத்த வேண்டும்”எந்த ஒரு ஆர்பாட்டத்தையும் நடத்துபவர்களை வன்முறை, சொத்துச் சேதங்களுக்குப் பொறுப்பேற்க வைக்க வேண்டும், போராட்டங்கள் அமைதியாக நடைபெற காவல்துறையுடன் அமர்ந்து பேசி போராட்டத் தலைமைகள் முடிவெடுக்க வேண்டும் என்றனர். இந்த வழக்கின் மீதான தீர்ப்பு அடுத்த அமர்வுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-ஆக-201809:52:46 IST Report Abuse
பாரதன். அரசு எடுக்கும் எல்லா நிர்வாக நடவடிக்கைகளையும் வரம்பு மீறிக் கடுமையாகத் தொடர்ந்து விமரிசனம் செய்து வரும் உச்சநீதிமன்றத்திடம் இப்படி தான் கேட்க வேண்டும். அருமை... கேகேவி அவர்களே.
Rate this:
Share this comment
Cancel
Ram - ottawa,கனடா
11-ஆக-201809:30:52 IST Report Abuse
Ram இந்த மாதிரி சமயத்தில் துப்பாக்கி பிரயோகம் செய்ய வேண்டியதுதான்
Rate this:
Share this comment
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
11-ஆக-201808:38:49 IST Report Abuse
பாமரன் ////....இந்த வழக்கின் மீதான தீர்ப்பு அடுத்த அமர்வுக்கு ஒத்திவைக்கப்பட்டது.../// எப்போ... அடுத்த சீசனுக்கா....???? நல்லா வருது..... ஆனால் வெளிவராது..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X