Setback for Talwars as SC admits CBI appeal | மீண்டும் தூசி தட்டப்படும் ஆருஷி வழக்கு: தல்வார் தம்பதிக்கு சிக்கல்| Dinamalar

இந்தியா

மீண்டும் தூசி தட்டப்படும் ஆருஷி வழக்கு: தல்வார் தம்பதிக்கு சிக்கல்

Added : ஆக 11, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 ஆருஷி வழக்கு,  ஹேம்ராஜ் , ஆயுள் தண்டனை, தல்வார் தம்பதி, டாக்டர் தம்பதி, ராஜேஷ் தல்வார், நுபுர் தல்வார், ஆருஷி கொலை வழக்கு, நீதிபதி ரஞ்சன் கோகாய் , ஹேம்ராஜ் மனைவி , உத்தர பிரதேசம் , ஹேம்ராஜ் மனைவி கும்கலா பான்ஜடே,கும்கலா பான்ஜடே, 
Aarushi case, Hemraj, life sentence, Talwar couple, doctor couple, Rajesh Talwar, Nupur Talwar, Aarushi murder case, Justice Ranjan Kokai, Hemraj wife, Uttar Pradesh, Hemraj wife Kumkala Panjate, Kumkala Panjade,

புதுடில்லி: உ.பி., மாநிலம், நொய்டாவை சேர்ந்த டாக்டர் தம்பதி, ராஜேஷ், நுபுர் தல்வார். 2008ல், தங்கள், 14 வயது மகள், ஆருஷியும், வீட்டு வேலைக்காரர் ஹேமராஜும், ரகசிய உறவு வைத்திருந்ததாக, ராஜேஷ், நுபுர் தல்வார் சந்தேகப்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில், 2008, மே மாதம், தன் வீட்டு அறையில், ஆருஷி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்;
அந்த வீட்டு மொட்டை மாடியில், ஹேம்ராஜ் இறந்து கிடந்தார்.இந்த வழக்கை, உ.பி., போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என்ற புகார் எழுந்ததால், சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், 2013ல், ராஜேஷ் மற்றும் நுபுருக்கு, ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இருவரும், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்தனர். 2017ல், ராஜேஷ், நுபுர் தல்வாரை விடுவித்து, அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து, ஹேம்ராஜின் மனைவி, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.இந்நிலையில், ராஜேஷ், நுபுர் விடுதலையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், சி.பி.ஐ.,யும் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த மனுவை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்தது.'ஹேம்ராஜ் மனைவி தாக்கல் செய்துள்ள மனுவுடன், சி.பி.ஐ.,யின் மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும்' என, நீதிபதி, ரஞ்சன் கோகாய் அறிவித்துள்ளார்

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
11-ஆக-201812:08:37 IST Report Abuse
Nallavan Nallavan ஆருஷியின் கொலையில் அல்லது இறப்பில் மர்மமோ மர்மம் ....
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
11-ஆக-201811:35:54 IST Report Abuse
S.Baliah Seer தன் கணவன் ஒரு காமுகன் என்று தெரிந்தும் ஹேம்ராஜின் மனைவி தன்னை நவீன நளாயினி என்று நினைத்து கொலை செய்யப்பட்ட கணவனுக்காக மேல் முறையீடு செய்வது தேவையற்றது. இவர் டாக்டர் தம்பதிகளிடம் உதவி கேட்கலாம். யார் ஹேம்ராஜை கொலை செய்தார்கள் என்று தெரியாதபோது ஆருஷியின் பெற்றோர்களை சிறைக்கு அனுப்புவதிலேயே ஹேம்ராஜின் மனைவி குறியாக இருப்பதால் அவரையும் கொலை சம்பந்தமாக விசாரிப்பதே சரி. டாக்டர் தம்பதிகளின் சொத்தை கபளீகரம் செய்ய யாரோ ஹேம்ராஜின் மனைவியைத் தூண்டி விடுகிறார்கள் என்றே தோன்றுகிறது.
Rate this:
Share this comment
Cancel
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
11-ஆக-201810:29:34 IST Report Abuse
Devanatha Jagannathan ஏற்கனவே பெண்ணை பறிகொடுத்துட்டாங்க. மேலும் வக்கிரம புத்தியோடு இல்லாமல் கோர்ட் கேஸை தள்ளுபடி செய்யணும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X