குழந்தை கொலை: தாய் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தை கொலை: தாய் கைது

Added : ஆக 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், கள்ளப்பட்டி காட்டுக்கொட்டகை பகுதியைச் சேர்ந்தவர், சிலம்பரசன், 35. இவரது மனைவி ராஜலட்சுமி, 27. இவர்களுக்கு சஞ்சனாஸ்ஸ்ரீ, 4; சிவனாஸ் ஸ்ரீ, 2, என, இரண்டு குழந்தைகள் இருந்தனர். சிலம்பரசன், கேரளாவில் கூலி வேலை செய்தார். காட்டுக்கொட்டகை பகுதியில் வசித்த ராஜலட்சுமிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த, பிரபாகரன், 29, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, ஊரை விட்டு சென்று விட்டனர்.இது குறித்து, சிலம்பரசன் கொடுத்த புகார்படி, அரும்பாவூர் போலீசார், ராஜலட்சுமியையும், பிரபாகரனையும் அழைத்து வந்து, பேச்சுவார்த்தை நடத்தினர். கணவருடன் செல்ல மறுத்ததால், ராஜலட்சுமியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். கடந்த, 1ம் தேதி, பிரபாகரன் விஷம் குடித்து, தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இதை அறிந்த ராஜலட்சுமி, 3ம் தேதி இரவு, இரண்டு குழந்தைகளுக்கும் எலி மருந்தை பாலில் கலந்து கொடுத்து, தானும் அதை உட்கொண்டதாக, பெற்றோரிடம் தெரிவித்துஉள்ளார்.அவர்கள், திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு, குழந்தை சிவனாஸ்ஸ்ரீ, இறந்தது. மற்றொரு குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறது. அரும்பாவூர் போலீசார், வழக்கு பதிந்து, ராஜலட்சுமியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X