கிளாமர் ஓ.கே., தாங்க : ப்ரீத்தி பிரதிபா 'பளீச்'| Dinamalar

கிளாமர் ஓ.கே., தாங்க : ப்ரீத்தி பிரதிபா 'பளீச்'

Added : ஆக 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கிளாமர் ஓ.கே., தாங்க : ப்ரீத்தி பிரதிபா 'பளீச்'

எட்டி நிற்கும் வானமும் தாலாட்டும்; எட்டாத மேகமும் தேகம் பார்த்து நீராட்டும்; விழிகளில் கவிநயமும், விரல்களில் அபிநயமும் காட்டி, பொன்னழகை விட மின்னும் இவள் அழகு தான் இளைஞர்களை கட்டிப்போடும்... அவர் நடிகை 'ப்ரீத்தி பிரதிபா' தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவர் மனம் திறந்ததாவது...

* சினிமா வாய்ப்புமுகநுால் வழியாக முதல் வாய்ப்பு கிடைத்தது. என் போட்டோக்களை பார்த்து நடிக்க வர்றீங்களான்னு கேட்டாங்க. உடனே ஓ.கே., சொல்லிட்டேன்.

* நடித்த படங்கள்ஆணிய புடுங்க வேணாம், சவாலே சமாளி, பொறியாளன், வை ராஜா வை. தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு படம் பார்ட்டி, நடிகர் பிரபு தேவாவுடன் சார்லி சாப்ளின்-2 படத்தில் நடித்து வருகிறேன்.

* பிடித்த நடிகர்கள்கமலஹாசன் படங்களை பார்த்து தான் நடிக்க ஆசையே வந்தது. நயன்தாரா, அனுஷ்காவை ரொம்ப பிடிக்கும். நடிகர் விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும்.

* விரும்பும் கேரக்டர்நாச்சியார் படத்தில் ஜோதிகா கேரக்டர் போல தில்லான, மிரட்டலான கேரக்டரில் நடிக்க ஆசை. ஆனா, நான் கொஞ்சம் சாப்ட் கேரக்டர்.

* கிளாமர்...தற்போது கிளாமர் இல்லாமல் எதுவும் இல்லை.. கிளாமர் இல்லாத சினிமா இருக்குமா. மக்கள் முகம் சுளிக்காத மாதிரி கிளாமர் காட்சிகளாக இருந்தால் ஓ.கே., தான்.

* சினிமாவில் பாலியல்அது தெரியலைங்க. திறமையை மட்டுமே வச்சிக்கிட்டு சினிமா வாய்ப்புக்காக நிறைய பேர் காத்திருக்காங்க. பெண்களுக்கு ஆண்கள் தான் பாதுகாவலாக இருக்க வேண்டும்.

* அழகுக்கு எதுக்கும் கவலைப்படாமல், எப்பவுமே சந்தோஷமா இருந்தால் போதும். தினமும் உடற்பயிற்சி, யோகா பண்ணலாம். எத்தனை வயதானாலும் அழகாகவே இருப்பீங்க. இது தெரியாம பல பேரு பியூட்டி பார்லர் போறாங்க.

* பொழுது போக்குமாடலிங் பண்ணுவேன், தோழிகளுடன் ஊர் சுற்றுவது, சினிமான்னு பொழுது போறதே தெரியாதுங்க.

* ரஜினி, கமல் அரசியல்புதுசா அரசியலுக்கு வர்றவங்களுக்கு வாய்ப்பு கொடுக்கணும். சினிமாக்காரங்கனு ஓரங்கட்ட கூடாது. மக்களுக்கு யாரால நல்லது பண்ண முடியும்னு தோணுதோ அவங்களுக்கு ஆதரவு கொடுக்கலாம்.

வாழ்த்த : preethiprathiba177@gmail.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X