காப்பக சிறுமியர் பாலியல் பலாத்காரம்; பீஹார் அமைச்சருக்கும் தொடர்பு? Dinamalar
பதிவு செய்த நாள் :
காப்பக சிறுமியர் பாலியல் பலாத்காரம்
பீஹார் அமைச்சருக்கும் தொடர்பு?

முசாபர்பூர் : பீஹாரில், அரசு காப்பகத்தில், 30 சிறுமியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், முக்கியக் குற்றவாளியான, பிரஜேஷ் தாக்கூரிடம் இருந்து, அமைச்சர் உட்பட, ௪௦ பேரின் மொபைல் போன் எண்கள் அடங்கிய பேப்பர் கைப்பற்றப்பட்டது.

காப்பக சிறுமியர்,பாலியல் பலாத்காரம்,பீஹார்,அமைச்சர்,தொடர்பு?


பீஹார் மாநிலத்தில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள முசாபர்பூரில், பிரஜேஷ் தாக்கூர் என்பவர், அரசு நிதி உதவியுடன் சிறுமியர் காப்பகம் நடத்தி வந்தார். காப்பகத்தில் உள்ள சிறுமியர்

பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக, சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, போலீசார் விசாரணை நடத்தினர். காப்பகத்திலிருந்த, 30 சிறுமியர் பலாத்காரத்துக்கு ஆளானது மருத்துவ சோதனையில் தெரிந்தது. பிரஜேஷ் தாக்கூர் உட்பட, 11 பேர் கைது செய்யப்பட்டு, முசாபர்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, சி.பி.ஐ., அதிகாரிகள், காப்பகத்தில் சோதனை நடத்தினர். மேலும், தாக்கூரின் வீட்டிலும் ஆய்வு நடத்தப்பட்டது. கைப்பற்றிய ஆவணங்கள், தடயங்கள் அடிப்படையில், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், முசாபர்பூர் சிறையின் பார்வையாளர் அறையில், நேற்று முன்தினம், போலீசார் நடத்திய திடீர் சோதனையில்,

Advertisement

தாக்கூரிடம் இருந்து, கையால் எழுதப்பட்டிருந்த ஒரு பேப்பர் கைப்பற்றப்பட்டது.

அதன், இரண்டு பக்கங்களிலும், பீஹார் மாநில அமைச்சர் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் அடங்கிய, 40 பேர் பெயர் மற்றும் மொபைல் போன் எண்கள் இருந்தன. இதுதொடர்பாக, விசாரணை நடக்கிறது. மேலும், முசாபர்பூர் சிறையில், தாக்கூர், சுதந்திரமாக உலா வருவதாகவும், கைதிகளுக்கான அறையில் தங்காமல், பார்வையாளர் அறையில் தங்கியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஆக-201816:13:17 IST Report Abuse

ஆப்புஇருக்காதே...இவிங்க ஆளுங்கள்ளாம் ரொம்ம்ம்ம்ம்ப நல்கவங்களாச்சே....

Rate this:
christ - chennai,இந்தியா
13-ஆக-201813:56:17 IST Report Abuse

christஇது போல நாதாரிகள் நாலுபேரை தூக்கில் தொங்க விடுங்கள் பிறகு பாருங்கள் நாட்டில் எவனாவது தப்பு செய்கிறனன என்று .

Rate this:
Sivagiri - chennai,இந்தியா
13-ஆக-201811:58:05 IST Report Abuse

Sivagiriஇங்கே அனைத்து அரசு எஸ்சி - எஸ்டி - பிசி - பள்ளி-கல்லூரி பெண்கள் ஹாஸ்டல் அனைத்திலும் பெண் குழந்தைகள் கண்ணீர் வடிப்பது கவனிப்பார் யாரோ . . .

Rate this:
மேலும் 24 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X