நாளை செயற்குழு கூட்டம் தி.மு.க.,வில், 'திக்... திக்...'| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நாளை செயற்குழு கூட்டம் தி.மு.க.,வில், 'திக்... திக்...'

Added : ஆக 12, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின், கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நாளை நடக்கிறது. இதன் பின், என்ன நடக்குமோ என, முக்கிய நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர். தி.மு.க., தலைவர் கருணாநிதி, வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால், ஆக., 7ல் காலமானார். அவரது உடல், மெரினாவில் உள்ள அண்ணாதுரை நினைவிடத்தில், நல்லடக்கம் செய்யப்பட்டது. நினைவிடத்திற்கு, தினமும் ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் வந்து, அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். இந்நிலையில், தி.மு.க., செயற்குழு கூட்டம், செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், சென்னை அறிவாலயத்தில், நாளை நடக்கிறது. இந்த கூட்டத்தில், கருணாநிதியின் மறைவிற்கு, மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது. முக்கிய நிர்வாகிகள், கருணாநிதிக்கு புகழ் அஞ்சலி செலுத்த உள்ளனர். அதன்பின், இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. செயற்குழு கூட்டத்திற்கு பின், பொதுக்குழுவை கூட்டுதல், தலைவராக ஸ்டாலினை தேர்வு செய்தல் மற்றும் கட்சி நிர்வாகிகளை மாற்றி அமைத்தல் உட்பட, பல விஷயங்கள் குறித்து, அடுத்தடுத்து ஆலோசிக்கப்படலாம் என, கூறப்படுகிறது.இதனால், செயற்குழுவிற்கு பின், எந்த மாதிரியான மாற்றங்கள் வருமோ என, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
13-ஆக-201809:57:46 IST Report Abuse
Panneerselvam Chinnasamy "அச்சம் என்பது மடமையடா ....அஞ்சாமை திராவிடர் உடமையடா" என்ற பாட்டை சத்தமாக வைத்துவிட்டு கூட்டத்தை ஆரம்பிப்பார்கள்...
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஆக-201809:02:07 IST Report Abuse
Swaminathan Nath தி மு க ஒரு குடும்ப கட்சி, சொத்து வெளியில் செல்லாமல் குடும்பம் பார்த்து கொள்ளும், மக்கள் சிந்தித்து செயல் பட வேண்டும்,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X