கடலோர மேலாண்மை திட்டம் : 100 வரைபடங்கள் தயார் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடலோர மேலாண்மை திட்டம் : 100 வரைபடங்கள் தயார்

Added : ஆக 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

தமிழக கடலோர மண்டல மேலாண்மை திட்டத்துக்காக, 100 வரை படங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும், 15 வரைபடங்களில் கள ஆய்வு அடிப்படையில், திருத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில், வளர்ச்சி திட்டங்களை முறைப்படுத்த, கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டன.
வரைவு அறிக்கை : இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கான, கடலோர மண்டல மேலாண்மை திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவ்வகையில், தமிழக கடலோர மண்டல மேலாண்மை திட்டத்திற்கான வரைவு அறிக்கை தயாரிக்கும் பணி, 2016ல், கடலோர மேலாண்மைக்கான தேசிய மையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்படி, கடலோர மண்டல மேலாண்மை திட்டத்துக்காக தயாரிக்கப்பட்ட, 115 வரைவு படங்கள் பிப்ரவரி, 19ல் வெளியிடப்பட்டன. இது தொடர்பாக, கடலோர மாவட்டங்களில், மார்ச், ஏப்ரல் மாதங்களில், கருத்து கேட்பு கூட்டங்களும் நடத்தப்பட்டன. இக்கூட்டங்களில் பங்கேற்ற பெரும்பாலானோர், வரைவு திட்ட படங்களில் குளறுபடிகள் இருப்பதாக சுட்டிக்காட்டி, கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த கருத்துகள் அனைத்தும் தொகுக்கப் பட்டு, வல்லுனர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டன.
ஒப்புதல் : இது குறித்து, வனத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: வல்லுனர்கள் பரிந்துரை அடிப்படையில், கடலோர மேலாண்மைக்கான தேசிய மையம், 100 வரைபடங்களை இறுதி செய்து, தமிழக அரசுக்கு, ஜூலை, 3ல் அனுப்பியது. இதற்கு, தமிழக அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, திட்ட வரைபடங்கள், தேசிய கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு அனுப்பப் பட்டுள்ளன.இதில், கன்னியாகுமரி, துாத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்கள் தொடர்பான, 15 வரைபடங்களில், கள ஆய்வு அடிப்படையில் திருத்தங்கள் செய்யப்பட உள்ளன. திருத்தம் செய்யும் பணிகள் முடிந்ததும், திட்டத்திற்கான, 15 வரைபடங்கள் இறுதி செய்யப்படும். மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்த பின், தற்போது உருவாக்கப்பட்ட வரைபடங்கள், அரசிதழில் வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையிலேயே வளர்ச்சி திட்டங்கள் அனுமதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X