காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுரை : 'செல்பி' எடுக்க வேண்டாம் என, தமிழக அரசு எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுரை : 'செல்பி' எடுக்க வேண்டாம் என, தமிழக அரசு எச்சரிக்கை

Added : ஆக 12, 2018 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை: 'காவிரி கரையோர மக்கள், ஆற்றுக்குள் இறங்குவதை தவிர்த்து, பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்' என, தமிழக அரசு எச்சரித்துள்ளது.
கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை பெய்வதால், தமிழக நதிக்கரை ஓரங்களில் வசிக்கும் மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழக வருவாய்த் துறை அமைச்சர், உதயகுமார், சென்னையில், நேற்று அளித்த பேட்டி:
முன்னெச்சரிக்கை : கர்நாடகாவின் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து, வினாடிக்கு, 1 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்படுவதால், காவிரி ஆற்றுப்படுகையில் உள்ள மாவட்டங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, ஆக., 9ல், மத்திய நீர்வள ஆணையம் எச்சரித்தது. இதையடுத்து, காவிரி கரையோர மாவட்டங்களான, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலுார், தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் கடலுார் மாவட்ட கலெக்டர்களுக்கு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. தற்போது, மேட்டூர் அணைக்கு, வினாடிக்கு, 1.30 லட்சம் கன அடி நீர் வரும் நிலையில், 1.35 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
தண்டோரா : இது பற்றி, ஆற்றங்கரையோர மக்களுக்கு தண்டோரா மற்றும் ஒலிப்பெருக்கி வழியாக அறிவுறுத்தப்படுகிறது. சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கையாக, 359 பேர் வெளியேற்றப்பட்டு, நான்கு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல் துறை மண்டல குழுக்களும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.காவிரி நதி நீர் கால்வாய்கள் மற்றும் பிற நீர் நிலைகளில் இருந்து நீரை வெளியேற்றும் போது, பொதுமக்கள் குளிப்பது, மீன் பிடிப்பது, 'செல்பி' எடுப்பது, குழந்தைகளை கரைகளில் விளையாட அனுமதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். ஆற்றின் தரைப்பாலங்களை கடக்க வேண்டாம். தாழ்வான பகுதிகளில் வசிப்போரும், கால்நடைகளும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.
நடவடிக்கை : வெள்ள பாதிப்பு குறித்து, மக்கள் பீதி அடையும் வகையில், வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் நெல்லை மாவட்டங்களில், இன்றும், நாளையும் கனமழை பெய்யலாம். எனவே, இந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆந்திர கடலோர பகுதி மீனவர்கள், மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.அவசர உதவி தேவைப்படுவோர், 1077, 1070 என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Senthil R - chennai,இந்தியா
13-ஆக-201810:00:01 IST Report Abuse
Senthil R தண்ணீர் எங்கே போகிறது என்று தெரியவில்லை ..காவிரி கரையோர கிளை ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் இதுநாள்வரை தண்ணீர் வரவில்லை . இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். முக்கியமாக தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பகுதிகளில் உள்ள எந்த ஒரு கிளை ஆறுகளிலும் மற்றும் வாய்க்கால்களிலும் தண்ணீர் வரவில்லை.நடவடிக்கை எடுக்க அமைச்சர் பெருமக்களை வேண்டிக்கொள்கிறேன் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X