கண்ணியம் குறைவான கடிதம் : முதல்வர் மீது கவர்னர் புகார்| Dinamalar

கண்ணியம் குறைவான கடிதம் : முதல்வர் மீது கவர்னர் புகார்

Added : ஆக 12, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

புதுச்சேரி: முதல்வர் நாராயணசாமி எழுதிய கடிதத்தை திருப்பி அனுப்ப கூறிய கவர்னர் கிரண்பேடி, முதல்வர் கண்ணியமற்ற கடிதம் எழுதி உள்ளதாக கூறி உள்ளார்.
புதுச்சேரியில்,கவர்னர் கிரண்பேடி, 4ம் தேதி கள ஆய்வு செய்த போது, பிறப்பித்த உத்தரவுகளை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, சமூக வலைதளத்தில் எச்சரிக்கை விடுத்தார். மறுநாள் முதல்வர் நாராயணசாமி, 'கவர்னர் கிரண்பேடிக்கு, தன்னிச்சையாக செயல்பட அதிகாரம் கிடையாது. அதனால், கவர்னர் பிறப்பிக்கும் எந்த உத்தரவையும் அதிகாரிகள் பின்பற்ற தேவையில்லை' என, பேட்டி அளித்தார். இந்நிலையில், மூத்த அதிகாரிகள், 'கவர்னருக்கு அதிகாரம் உள்ளது' என்பதை ஒப்புக் கொண்டுஉள்ளனர். முதல்வர் ஒத்துழைப்பு அளிக்காததால், மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டி, 6ம் தேதி சமூக வலைதளத்தில், கவர்னர் கருத்தை பதிவு செய்திருந்தார். கவர்னரின் கருத்திற்கு பதில் அளிக்கும் வகையில், முதல்வர் நாராயணசாமி, நேற்று முன்தினம், 'அனைத்து திட்டங்களுக்கும் முட்டுக்கட்டை போடுவது தான் கவர்னர் வேலை. 'அமைச்சர்களின் ஆலோசனைப்படி, சட்டத்திற்கு உட்பட்டு, கவர்னர் செயல்படுவதாக இருந்தால், ஒத்துழைப்பு அளிப்பேன்' என, கவர்னருக்கு கடிதம் எழுதியிருப்பதாக கூறினார்.
இது குறித்து, கவர்னர் கிரண்பேடி, நேற்று சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள கருத்து:முதல்வர் நாராயணசாமி, எனக்கு எழுதிய கடிதம் குறித்து, செய்தியாளர்களிடம் கூறியதை, பத்திரிகையில் படித்தேன். அந்த கடிதம் கவர்னருக்கு எழுதியது என்றால், அதை திருப்பி அனுப்ப கூறி விட்டேன். கவர்னர் அலுவலகத்திற்கு, முதல்வர் கண்ணியம் குறைவான கடிதத்தை எழுதியுள்ளார்.ஏற்கனவே முதல்வர், இதுபோன்ற கண்ணியமற்ற கடிதங்களை எழுதியுள்ளார். அது, அவரது வழக்கமாகி விட்டது. இதுபோன்ற கடிதத்தை எழுதி, முதல்வரின் அலுவலகம், தன் கண்ணியத்தை, கெடுத்துக் கொள்ள கூடாது என்பதை, முதல்வர் உணர்வார் என நம்புகிறேன்.இவ்வாறு கவர்னர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
13-ஆக-201815:18:36 IST Report Abuse
Sridhar கண்ணியத்தை எதிர்பாக்கலாமா? கிரண் பேடி இன்னும் தீவிரமாக உள்ளே சென்று இந்த அயோக்கிய சிகாமணிகள் துட்டு அடிக்கும் இடத்தையெல்லாம் அம்பலப்படுத்தவேண்டும். கவர்னருக்கு இருக்கும் அதிகார வசதிகளை பயன்படுத்தி காமெராவுடன் ஆட்களை செட்டப் செய்து கையும் களவுமாக பிடித்தால் இவன்களுடைய சாயம் வெளுத்து, இந்த பசங்க எல்லாம் டுபாகூர் ஈஸியா மாட்டிக்குவாங்க உஷாரா இருக்கணும்கற அளவுக்கு மூளையெல்லாம் கிடையாது. போலீஸ்கார மேடம் சும்மா போட்டு தள்ளுங்க.
Rate this:
Share this comment
Cancel
rajan. - kerala,இந்தியா
13-ஆக-201810:57:27 IST Report Abuse
rajan.  அது என்ன அமைச்சர் ஆலோசனை படி? என்ன கட்டிங் பிரச்சினையா நாராயண நாராயண. உங்களுக்கு வேற பிழைப்பே இல்லையா. மக்கள் நலனை நோக்கும் போது எந்த பிரச்சினையும் வராது. நீங்க ஆளாளுக்கு துண்டு விரிச்சு பிரிக்க களம் இறங்கும் போது தான் பிரச்சினை பெருசாவுது நாராயண நாராயண.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஆக-201809:50:03 IST Report Abuse
Srinivasan Kannaiya நாராயணசாமி இல்லை அவர் நாறன சாமி .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X