வனக்குழுவின் ஒரு வார வேட்டையில் 110 குரங்குகள்; 120 பாம்புகள் சிக்கின| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வனக்குழுவின் ஒரு வார வேட்டையில் 110 குரங்குகள்; 120 பாம்புகள் சிக்கின

Added : ஆக 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: வனத்துறை குழுவினர், மூன்று மாவட்டங்களில், ஒரு வாரம் நடத்திய வேட்டையில், 110 குரங்குகள், 120 பாம்புகள் பிடிக்கப்பட்டன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தை உள்ளடக்கிய வனத்துறையில், குரங்கு மற்றும் பாம்பு தொல்லை குறித்த புகார்கள் அதிகமாக பதிவாகின்றன.
தொந்தரவு : குறிப்பாக குரங்குகள், வீடுகளில் புகுந்து உணவு பொருட்களை சேதப்படுத்துவது, வீட்டு மாடியில் காயப்போடும் துணிகளை கிழிப்பது, குழந்தைகளை அச்சுறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன.நீர்நிலை மற்றும் அடர்த்தியான புதர்களில் பாம்புகள் உள்ளதால், அருகில் வசிப்போர் அச்சம் அடைகின்றனர். அவற்றை, பிடித்து செல்ல, வனத்துறையை நாடுகின்றனர்.வேளச்சேரி வனச்சரகர், மோகன் தலைமையிலான குழுவினர், ஒரு வாரம், குரங்கு, பாம்பு பிடிக்கும் வேட்டையில் இறங்கினர்.
விடப்பட்டன : கோவளம், அம்பத்துார், கிண்டி, அனகாபுதுார், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில், கூண்டு வைத்து, 110 குரங்குகள் மற்றும், 45 விஷ பாம்புகள் உட்பட, 120 பாம்புகள் பிடித்தனர்.சென்னை வன உயிரின காப்பாளர், பத்மா உத்தரவின்படி, பிடிக்கப்பட்ட குரங்குகள் மற்றும் பாம்புகள், நேற்று முன்தினம், செங்கல்பட்டு அடுத்துள்ள மைலம், காப்புக்காடு வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X