வீராணம் - சென்னைக்கு தண்ணீர் அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வீராணம் - சென்னைக்கு தண்ணீர் அதிகரிப்பு

Added : ஆக 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காட்டுமன்னார்கோவில்: வீராணம் ஏரியிலிருந்து, சென்னைக்கு அனுப்பப்படும் குடிநீர் அளவை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் படிப்படியாக அதிகரித்து வருகின்றனர்.கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் அமைந்துள்ள வீராணம் ஏரியில் இருந்து, சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த மாதம், காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டதால், மேட்டூர் அணை நிரம்பியது. இதை தொடர்ந்து, கடந்த, 19ம் தேதி, பாசனத் திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர், கல்லணை வழியாக, 26ம் தேதி கீழணைக்கு வந்து சேர்ந்தது.கீழணையில் இருந்து, வடவாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு, வீராணம் ஏரியில் தேக்கும் பணி துவங்கியது. கடந்த, 10ம் தேதி, ஏரி முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து, நேற்று முன்தினம் முதல், சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி துவங்கியது. முதல் கட்டமாக, 55 கன அடியாக அனுப்பப்பட்ட தண்ணீர், நேற்று முதல், 66 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

உபரி நீர் அதிகளவில் வந்து கொண்டிருப்பதால், சென்னைக்கு அனுப்பும் நீரின் அளவு, படிப்படியாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X