தீபா கட்சி பதவிக்கு ரூ.5.40 லட்சம்: தம்பதி மீது வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீபா கட்சி பதவிக்கு ரூ.5.40 லட்சம்: தம்பதி மீது வழக்கு

Added : ஆக 12, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருச்சி: தீபா கட்சியில், மகளிரணி மாவட்டச் செயலர் பதவி வாங்கித் தருவதாக, 5.40 லட்சம் ரூபாய் வாங்கி, மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.திருச்சி, மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி ராதா. அரசியலில் ஆர்வம் கொண்ட இவர், ஜெயலலிதா மறைந்ததால், புதிய கட்சி துவங்கிய, அவரது அண்ணன் மகள் தீபா கட்சியில், பதவிக்கு வர விரும்பினார். இதையறிந்த, தீபா பேரவை மாவட்ட பிரதிநிதி பொன்னுசாமியும், அவரது மனைவி லட்சுமியும், திருச்சி மாநகர தீபா பேரவை மகளிரணி செயலர் பதவி வாங்கித் தருவதாக, ராதாவை அணுகியுள்ளனர். இதற்காக, அவரிடம், ஓராண்டுக்கு முன், 5.40 லட்சம் ரூபாய் பெற்று உள்ளனர். ஆனால், கூறியபடி, கட்சியில் பதவி பெற்றுத் தரவில்லை. கொடுத்த பணத்தை, ராதா கேட்ட போது, ஏமாற்றி வந்துள்ளனர்.இதுகுறித்து, திருச்சி, ஜே.எம்., 1 நீதிமன்றத்தில், ராதா வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிமன்றம், தம்பதி மீது, வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இதன்படி, திருச்சி, கோட்டை குற்றப்பிரிவு போலீசார், தீபா பேரவை மாவட்ட பிரதிநிதி பொன்னுசாமி, அவரது மனைவி லட்சுமி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்ய, தேடி வருகின்றனர்.பொன்னுசாமி, திருச்சியில், டிராவல்ஸ் நிறுவனம், இரவு நேர டிபன் கடை நடத்தி வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
13-ஆக-201809:01:40 IST Report Abuse
Bhaskaran Innum aarambikaveyillai atharkullaagavaa deepaa ammavukku evvalavu koduthaarkalo
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X