அமைச்சர் கட்டும் வீட்டில் தவறி விழுந்தவர் பலி | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் கட்டும் வீட்டில் தவறி விழுந்தவர் பலி

Added : ஆக 12, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆரணி : அறநிலையத் துறை அமைச்சர், புதிதாக கட்டி வரும் வீட்டின் மாடியில் இருந்து, தவறி விழுந்த மேற்பார்வையாளர் இறந்தார். தமிழக அறநிலையத் துறை அமைச்சர் ராமச்சந்திரன், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த, சேவூரில், மூன்றடுக்கு புதிய சொகுசு வீடு கட்டி வருகிறார். ஒரு அடுக்கு கட்டப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து பணி நடந்து வருகிறது.கட்டுமான பணியை, அமைச்சரின் உறவினரும், அ.தி.மு.க., கிளை அவை தலைவருமான குப்பன், 55, என்பவர் கண்காணித்து வந்தார். நேற்று காலை, 10:30 மணிக்கு, பணி நடந்த போது, முதல் மாடியிலிருந்து, குப்பன் தவறி விழுந்து காயமடைந்தார். ஆரணி, அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். டாக்டர்கள் பரிசோதித்ததில், மாரடைப்பில் அவர் இறந்ததாக தெரிவித்தனர். ஆரணி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
13-ஆக-201809:02:36 IST Report Abuse
Bhaskaran இறைவன் மிகப்பெரியவன் கணக்கு தீர்க்காமல் விடமாட்டான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X