புகை பிடிப்பதன் தீமைகள் குறும்படம் தயாரிக்க முடிவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

புகை பிடிப்பதன் தீமைகள் குறும்படம் தயாரிக்க முடிவு

Added : ஆக 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பனாஜி : சிகரெட் புகைப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், குறும்படம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் மனோகர் பரீக்கர் தலைமையிலான, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கும் கோவாவில் உள்ள, மஜோர்டாவில் நடந்த நிகழ்ச்சியில், ஸ்ரீவத்சவா பேசியதாவது:திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகள் பற்றி ஆய்வு செய்ய, திரைப்பட தயாரிப்பாளர் ஷியாம் பனகல் தலைமையில், 2016ல், கமிட்டி ஒன்றை, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் நியமித்தது. இந்த கமிட்டி, ஏப்ரலில் சமர்ப்பித்த, தன் முதல் அறிக்கையில், 'திரைப் படங்களில், கதாநாயகன் அல்லது வில்லன் பாத்திரங்களில் நடிப்பவர்கள், தங்கள் வீரத்தை வெளிப்படுத்துவதற்கு அடையாளமாக, சிகரெட் புகைப்பதை காட்டுகின்றனர்' என கூறப்பட்டு இருந்தது. மேலும், 'இதுபோன்ற காட்சிகள், இளைஞர்கள் மனதில், சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற ஆசையை துாண்டுகிறது. 'புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதை பெரிய கவுரவமாக, திரைப்படங்களில் காட்டுகின்றனர்' என்றும், அதில் தெரிவிக்கப் பட்டிருந்தது.எனவே, சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, திரைப்படங்களில், சிகரெட் பிடிக்கும் நடிகர்களை வைத்து, குறும்படம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்த திட்டத்தை செயல்படுத்த, மத்திய தகவல் ஒலிபரப்புத்தறை அமைச்சகம் சம்மதித்து உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X