12 ஆண்டுகளுக்கு பின் அதிகபட்ச நீர் திறப்பு; காவிரி ஆற்றில் மீண்டும் பெருக்கெடுத்த கடும் வெள்ளம் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
12 ஆண்டுகளுக்கு பின் அதிகபட்ச நீர் திறப்பு:
காவிரி ஆற்றில் மீண்டும்
பெருக்கெடுத்த கடும் வெள்ளம்

மேட்டூர் அணையில், 12 ஆண்டுகளுக்கு பின், நேற்று முன்தினம் இரவு, அதிகபட்ச நீர் திறக்கப்பட்டது. காவிரியாற்றில் பெருக்கெடுத்த வெள்ளம், மேட்டூர் - இடைப்பாடி சாலையில் புகுந்தது.

அதிகபட்ச,நீர் திறப்பு,காவிரி,ஆற்றில்,பெருக்கெடுத்த,கடும் வெள்ளம்


கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீர் வரத்தால், நடப்பாண்டில், ஜூலை, 23ல் முதல் முறையாகவும், ஆக., 11ல், இரண்டாம் முறையாகவும், மேட்டூர் அணை நிரம்பியது. இரண்டு நாட்களாக, கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில், வினாடிக்கு, 1.43 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டது.

மேட்டூர் அணையில் இருந்து, நேற்று முன்தினம், வினாடிக்கு, 1.25 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால், காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இரவு, 11:30 மணிக்கு நீர் திறப்பு, 1.36 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. கடந்த, 2005, அக்., 24ல், மேட்டூர் அணையில் அதிகபட்சமாக, 2.31 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு பின், நேற்று முன்தினம் இரவு, அதிகபட்சமாக, 1.36 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டது.

போக்குவரத்து துண்டிப்பு :


காவிரியில் பெருக்கெடுத்த வெள்ளம், அனல்மின் நிலையம் அருகே, மேட்டூர் - இடைப்பாடி நெடுஞ்சாலையில் புகுந்ததால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நேற்று காலை, நீர் திறப்பு, 1.25 லட்சம் கன அடியாக குறைக்கப்பட்டதால், நெடுஞ்சாலையில் தேங்கிய தண்ணீர் வடிந்து, மீண்டும் போக்குவரத்து துவங்கியது.

படகு ரத்து :


பண்ணவாடி நீர் பரப்பு பகுதியில், காற்று பலமாக வீசியதால், நீரில் அலைகள் பல அடி உயரம் வரை எழும்பின. இதனால், பண்ணவாடி - நாகமறை விசைப்படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

விடுமுறை நாளான நேற்று, மேட்டூர் அணையை பார்வையிட, ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணியர் குவிந்தனர். இதனால், பவானி - தொப்பூர் நெடுஞ்சாலையில், தங்கமாபுரிபட்டணத்தில் காலை முதல் இரவு வரை, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, டெல்டா விவசாயிகள் பலர், பஸ் மற்றும் வேன்களில், மேட்டூர் வந்து, அணை, 16 கண் மதகு பகுதியை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

நேற்று மாலை, மேட்டூர் அணை நீர்மட்டம், 120.10 அடி, நீர் இருப்பு, 93.63, டி.எம்.சி.,யாக இருந்தது. வினாடிக்கு, 1.20 லட்சம் கன அடி நீர் வந்தது. அணை மின் நிலையம், 16 கண் மதகு வழியாக, வினாடிக்கு, 1.25 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. கர்நாடகா அணைகளின் உபரி நீர் திறப்பு குறைந்ததால், வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்வரத்து சரியும்.

ஒகேனக்கல் :


தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரியாற்றில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, 1.40 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு, 1.22 லட்சம் கன அடியாக குறைந்தது. இது, மாலை, 5:00 மணிக்கு, 1.20 லட்சம் கன அடியாக குறைந்தது. ஒகேனக்கல் காவிரியாற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம், அருவிகள் அனைத்தையும் மூழ்கடித்து, செல்கிறது. தொடர்ந்து நேற்று, 35வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது.

மாயனுார் :


கரூர் மாவட்டம், மாயனுார் கதவணை, 16.7 அடி உயரம், 1.5 கி.மீ., நீளம் கொண்டது. 1.5 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட அணையில், அதிகபட்சம், 1 டி.எம்.சி., தண்ணீர் தேக்க முடியும். கதவணையில் இருந்து, 70 மதகுகள் வழியாக, 1.04 லட்சம் கன அடி நீர், ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், கரையோர பகுதி வயல்களில் தண்ணீர் புகுந்து உள்ளது.

பெரும்பாலான வயல்களில், சோளம் அறுவடை முடிந்து, உழவுப் பணி துவங்கவுள்ள நிலையில், வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், உழவுப் பணி எளிதாக இருக்கும் என, விவசாயிகள் தெரிவித்தனர். ஆனால், வாழைத் தோட்டங்களில் தேங்கி நிற்கும்

Advertisement

தண்ணீர், இரண்டு நாட்களில் வடியா விட்டால், மரங்கள் அழுகி விடும் என, வாழை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

முக்கொம்பு :


நேற்று மாலை, 6:00 மணி நிலவரப்படி, திருச்சி, முக்கொம்பு அணைக்கு, 1.09 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதில், 30 ஆயிரம் கன அடி, பாசனத்துக்கு காவிரி ஆற்றிலும், 70 ஆயிரம் கன அடி, கொள்ளிடம் ஆற்றிலும் திறந்து விடப்பட்டுள்ளது.

முக்கொம்பு அணையில் இருந்து, கல்லணைக்கு திறக்கப்படும், 30 ஆயிரம் கன அடியில், காவிரியில், 9,040 கன அடியும், வெண்ணாற்றில், 9,022 கன அடியும், கல்லணை கால்வாயில், 2,656 கன அடியும் திறக்கப்படுகிறது. கல்லணையில் இருந்து, கொள்ளிடம் ஆற்றுக்கு, 8,070 கன அடி நீர் திறக்கப்படுவதால், மொத் தம், 78 ஆயிரம் கன அடி தண்ணீர், வீராணம் நோக்கி கொள்ளிடத்தில் திறக்கப்பட்டுள்ளது.

18 கிராமங்களுக்கு எச்சரிக்கை :

ஈரோடு மாவட்ட காவிரியில், இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. இதனால், 18 வருவாய் கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி கரையோரங்கள், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்படியும், மேடான பகுதிகளுக்கு செல்லுமாறும், கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று காலை, கலெக்டர் பிரபாகர், ஈரோடு கருங்கல்பாளையம், பவானி பகுதியில், பல கிராமங்களில் ஆய்வு செய்தார். பின், அவர் கூறியதாவது: தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பவானி கரையோர பகுதியில் வசித்த, 27 குடும்பங்கள் திருமண மண்டபத்திலும், கொடுமுடி பகுதியில் வசித்த, 60 குடும்பங்கள், எஸ்.எஸ்.டி., பள்ளியிலும் முகாம் அமைத்து தங்க ஏற்பாடு செய்துள்ளோம். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


- நமது நிருபர் குழு -


Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Madhu - Trichy,இந்தியா
13-ஆக-201822:07:42 IST Report Abuse

 Madhuகாவிரி, கொள்ளிடம் ஆறுகளில் உடனடியாகத் தடுப்பணைகள் கட்ட முடியாது. காவிரி, கொள்ளிடக் கரைகளின் இரு புறமும் இருக்கும் கிராமங்களில் பஞ்சாயத்து யூனியன்களுக்கு வழங்கப் படும் நிதியை உபயோகித்து மேல்மட்ட நீர்த் தேக்கத் தொட்டிகளை அதிக அளவில் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் அமைத்து அவற்றில் காவிரி கொள்ளிடம் ஆறுகளில் பாயும் உபரி வெள்ள நீரை மின் மோட்டார் பம்புகள் மூலம் இறைத்து, சேமித்து, சுத்திகரித்துப் பின் குழாய்கள் மூலம் இனி குடிநீர்ப் பற்றாக்குறை இருக்கும் அநேக கிராமங்களுக்கு, . குடிநீராக‌ வழங்கலாம். ஆறுகள், ஓடைகள் வாய்க்கால்கள் பல இடங்களில் தூர் வாராமல் இருப்பதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு. கடந்த 5, 6 ஆண்டுகளில் காவிரி நீர்ப் பாசனம் முறையாக இல்லாததால், பலர் பிளாட் போட்டு தங்கள் வயல்களை விற்று விட்டார்கள். இவைகளில் வீடு கட்டியவர்கள், நீர் வழித்தடங்களையும் கூட மூடி ஆக்கிரமித்து விட்டார்கள். அரை குறையாக தூர் வாரப்பட்ட வாய்க்கால்கள் வழியே இனி வெள்ள நீர் வந்தால் நேராக குடியிருப்புகள் உள்ள தாழ்வான பகுதிகளுக்குத்தான் போகும். தொலைவில் இருக்கும் ஒரு சில பாசன வயல்களுக்கு செல்லாது.

Rate this:
Sudhakar S - Chennai,இந்தியா
13-ஆக-201821:17:18 IST Report Abuse

Sudhakar Sஇன்று பெட்டவாய்தலையில் (அகண்ட காவிரி உள்ள ஊர்) இருந்து திருச்சி வரை செல்லும் காவேரி ஆற்றை பார்த்தேன். செய்தியில் சொன்னபடி வெள்ளம் வர வாய்ப்பு இல்லை. இப்பொழுது உள்ளது போல் மூன்று மடங்கு தண்ணீர் (2லட்சம் கன அடி) வந்தால் கூட தாங்கும் அளவு உள்ளது காவேரி. சும்மா பூச்சாண்டி காண்பிக்காதீர்கள்.

Rate this:
jagan - Chennai,இந்தியா
13-ஆக-201820:58:47 IST Report Abuse

jaganநான் சொல்வது தான் நிஜம்

Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X