விமான கண்காட்சி நடப்பது எங்கே? : உத்தர பிரதேசம் - கர்நாடகா மோதல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

விமான கண்காட்சி நடப்பது எங்கே? : உத்தர பிரதேசம் - கர்நாடகா மோதல்

Added : ஆக 13, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

புதுடில்லி: 'ஏரோ இந்தியா' எனப்படும், விமான துறை கண்காட்சியை, 'லக்னோவுக்கு மாற்ற வேண்டும்' என, உ.பி., முதல்வர் வலியுறுத்தி வருகிறார். ஆனால், 'திட்டமிட்டபடி, பெங்களூரில் தான் நடத்த வேண்டும்' கர்நாடகா கூறி வருவதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக தலைநகர் பெங்களூரில், இரு ஆண்டுக்கு ஒருமுறை, 'ஏரோ இந்தியா' கண்காட்சி நடந்து வருகிறது. இந்தாண்டு, அக்டோபர் - நவம்பர் மாதங்களில், பெங்களூரில் இந்த கண்காட்சி நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், உ.பி., மாநிலம், அலிகாரில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில், அலிகார், ஆக்ரா, கான்பூர், லக்னோ, ஜான்சி, சித்ரகூட் ஆகிய நகரங்களை உள்ளடக்கி, ராணுவ தொழிற்சாலை பாதை அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியின் போது, 'ஏரோ இந்தியா கண்காட்சியை, லக்னோவில் இந்தாண்டு நடத்த வேண்டும்' என, பா.ஜ.,வை சேர்ந்த, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தி உள்ளார்.இதற்கு, கர்நாடக துணை முதல்வரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான, பரமேஸ்வரா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
'டுவிட்டர்' சமூக தளத்தில், அவர் கூறியுள்ளதாவது:ஏரோ இந்தியா கண்காட்சி, 1996 முதல், பெங்களூரில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியை, பெங்களூரில் இருந்து வேறு நகருக்கு மாற்ற நடக்கும் முயற்சிகள் துரதிருஷ்டவசமானவை. தே.ஜ., கூட்டணிஅரசில், பல முக்கிய திட்டங்களை, கர்நாடகா இழந்து வருகிறது. இந்த விவகாரத்தில், தன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும்படி, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.ஏரோ இந்தியா கண்காட்சி தொடர்பாக, உ.பி., முதல்வரும், கர்நாடகா அரசும் மோதிக் கொள்வது, அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vidhya - delhi,இந்தியா
16-ஆக-201815:02:56 IST Report Abuse
vidhya This is not belongs to one state so changes should be given for other states too
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X