காஷ்மீரில் தாக்குதல் : போலீஸ்காரர் பலி| Dinamalar

காஷ்மீரில் தாக்குதல் : போலீஸ்காரர் பலி

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில், போலீஸ்காரர் ஒருவர், வீர மரணம் அடைந்தார். ஜம்மு - காஷ்மீரில், கவர்னர் ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின், பாட்மலோ பகுதியில், தியார்வணி என்ற இடத்தில், பாதுகாப்பு படையினர், நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், உள்ளூர் போலீசாரும் பங்கேற்றனர். பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. பயங்கரவாதிகள் சுட்டதில், போலீஸ்காரர், பர்வேஸ் அகமது, அதே இடத்தில் பலியானார்.காயமடைந்த பாதுகாப்பு படை வீரர்கள், ஐந்து பேர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இரண்டு பயங்கரவாதிகள் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தேடுதல் வேட்டை தொடர்ந்து நடக்கிறது.பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை துவங்குவதற்கு முன், நேற்று அதிகாலையிலேயே, பாட்மலோ பகுதியில், மொபைல் போன் மற்றும் இணைய சேவை துண்டிக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X