மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கண்டிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கண்டிப்பு

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி : 'சீனா, ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட, எச்சரிக்கையுடன் அணுக வேண்டிய சில நாடுகளை சேர்ந்த ஏஜன்சிகளுடன், நேரடியாக செயல்பட வேண்டாம்' என, மாநில அரசுகளை, மத்திய அரசு எச்சரித்து உள்ளது. மாநில அரசுகளின் தலைமைச் செயலர்களுக்கு, மத்திய அரசு சமீபத்தில் அனுப்பியுள்ள கடித விபரம்: எச்சரிக்கையுடன் அணுக வேண்டிய, பாக்., சீனா, ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளை சேர்ந்த, சில ஏஜன்சிகள், அமைப்புகள், பரஸ்பர ஒத்துழைப்பு, பயிற்சி, கூட்டு பயிற்சி, கருத்து பரிமாற்றம் ஆகியவற்றுக்காக, மாநில அரசுகளை அணுகி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இத்தகைய சந்தர்ப்பங்களில், மாநில அரசுகள், அந்த ஏஜன்சிகளுடன் நேரடியாக செயல்படுவதை தவிர்க்க வேண்டும். அந்த ஏஜன்சிகளின் அழைப்புகள் பற்றி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி, மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பாகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளை சேர்ந்த நிறுவனங்களுடன் எச்சரிக்கை உணர்வுடன் செயல்படாவிட்டால், அது, உள்நாட்டு பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என, அஞ்சப்படுகிறது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X