மணல் கடத்திய 4 பேர் கைது  3 டாரஸ் லாரிகள் பறிமுதல் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்திய 4 பேர் கைது  3 டாரஸ் லாரிகள் பறிமுதல் 

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிதம்பரம்: மணல் கடத்தி வந்து 3 டாராஸ் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்த, நான்கு பேரை கைது செய்தனர்.சிதம்பரம் தாலுகா போலீசார் நேற்று முன்தினம் கண்ணங்குடி ரோடு-பைபாஸ் சந்திப்பு அருகில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, தார் பாய் போட்டு மூடி மணல் ஏற்றி வந்த மூன்று டாரஸ் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், நாகை மாவட்டத்தில் இருந்து மணல் கடத்தி வருவது தெரிய வந்தது.அதனைத் தொடர்ந்து மூன்று லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிந்து லாரி டிரைவர்களான சேலம் சங்ககிரி காட்டுபனவூரைச் சேர்ந்த வடிவேல்,46; எடப்பாடி கட்சிப்பள்ளியைச் சேர்ந்த வைத்தியநாதன்,26; கொங்கனாபுரம் தனபால,38; ஓமலுார் கண்காணிப்பட்டி நாராயணன்,32; ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X