ஓட்டலில் திருட்டு ஊழியருக்கு வலை | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓட்டலில் திருட்டு ஊழியருக்கு வலை

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கடலுார்: ஓட்டலில் நகை மற்றும் பணத்தை திருடிய ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார், இம்பிரியல் சாலையில் உள்ள ஓட்டலில் பணிபுரியும் ஊழியர்கள் வழக்கம் போல் கடந்த 27ம் தேதி இரவு ஓட்டலை பூட்டி விட்டு அங்கேயே துாங்கினர். மறுநாள் காலையில் வழக்கம் போல் ஊழியர்கள் ஓட்டலை திறந்தனர். அப்போது, பணப்பெட்டி திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, ஓட்டல் உரிமையாளர் முத்துகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தனர்.அவர், வந்து பார்த்த போது, ரூ. 22 ஆயிரம் ரொக்கம், 2 கிராம் மோதிரம், 2 கிராம் டாலர் மாயமானது தெரிய வந்தது. ஓட்டலில் உள்ள 'சி.சி.டிவி' கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பார்த்த போது, அங்கு சர்வராக பணிபுரிந்த மேல்மலையனுாரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் நகை மற்றும் பணத்தை திருடியது தெரிய வந்தது.இது குறித்த புகாரின்படி கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து தமிழ்ச்செல்வனை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X