வெறிநாய் கடித்து 15 பேர் படுகாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெறிநாய் கடித்து 15 பேர் படுகாயம்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கடலுார்: காட்டுமன்னார்கோவில் அருகே வெறி நாய் கடித்ததில், 1௫க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டை காயிதே மில்லத் சாலையில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று திருமணம் நடந்தது.மதிய விருந்துமுடிந்து மக்கள் வெளியே வந்தபோது,வெறிநாய் ஒன்று, அவர்களை விரட்டி கடித்தது.பீதியடைந்த மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.வெறி நாய் கடித்தில், ௧௫க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.அனைவரும் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு தடுப்பூசி இல்லாததால், சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.அங்கும் தடுப்பூசி இல்லாததால், கடலுார்அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைக்கப்பட்டனர்.அங்கு காயமடைந்த லால்பேட்டையைச் சேர்ந்த ஹசன்பீவி,80; அசியாபீவி,50; ஆசைதம்பி,50; சுல்தான்கனி,57; முகமது அப்ராத்,16; அப்துல்ஹமீத்,58; முகமது சபீர்,55; ஜக்ரியா, 38, உட்டபட 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X