சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு எஸ்.பி., பாராட்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு எஸ்.பி., பாராட்டு

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விழுப்புரம்: டாஸ்மாக் மேற்பார்வையாளர் தவறவிட்ட, ரூ. ௫௫ ஆயிரம் ரொக்கத்தை ஒப்படைத்த ஆட்டோ டிரைவரை எஸ்.பி., பாராட்டினார்.உளுந்துார்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜா. ஆட்டோ டிரைவர். இவர், கடந்த 10ம் தேதி மதியம் 3:30 மணிக்கு நத்தாமூருக்கு சவாரி சென்று திரும்பிக்கொண்டிருந்தார். பச்சையப்பா நகர், அய்யனார் கோவில் அருகில் உள்ள வேகத்தடையில் முன்னால் சென்ற மோட்டார் பைக்கில் இருந்த பெட்டி திறந்து கொண்டு, அதிலிருந்த பணம் காற்றில் பறந்து சிதறியது. இதை கவனிக்காமல், வாகன ஓட்டி சென்றுள்ளார்.இதை கவனித்த ஆட்டோ டிரைவர் ராஜா, அந்த பணத்தை மொத்தமாக சேகரித்தார். அதில், ரூ. 55 ஆயிரம் இருந்தது. அதனை உரியவரிடம் ஒப்படைப்பதற்காக, உளுந்துார்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகத்திடம் தொகையை ராஜா ஒப்படைத்தார்.போலீசார் விசாரணையில், பணத்தை தவறவிட்டது டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் என்பது தெரியவந்தது. அதையடுத்து டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.ஆட்டோ டிரைவர் ராஜாவின் நேர்மையை பாராட்டி, எஸ்.பி., ஜெயக்குமார், வெகுமதி வழங்கினார்.அப்போது, உளுந்துார் பேட்டை டி.எஸ்.பி., ராஜேந்திரன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X